முதலமைச்சர் மாநில விருது – விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது” தலா ரூ.1.00 இலட்சம் வீதம், ரூ.10000/- மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது.

இதுதவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர்  (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோருக்கும் முதலமைச்சர் மாநில விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10000/- மிகாமல் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது பெறுவதற்கு கீழ்கண்ட ஆண்டுகளின் வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மேலும், முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் (SAARC), அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றிருத்தல் வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மூலமாகவும்,  விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உரைமேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.08.2025 மாலை 5.45 மணி வரை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி எண்.0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.சரவணன்,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.