முதுகுவலியை குணப்படுத்த 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி!
“சீனா என்றாலே வினோதம் என்றாலே சீனா” என்றே கூறலாம். சீனாவில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே வினோதங்களின் உச்சமாகவே உள்ளது. ஆம் வழக்கம் போல் இந்த கட்டுரையையும் நம் சீனக்காரர்களை பற்றிய தான் பார்க்க போறோம்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்தவர் 82 வயதான மூதாட்டி ஜாங், இவர் பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்தும், அவருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் நாட்டு வைத்திய முறை குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதன்படி உயிருடன் தவளைகளை விழுங்கினால், முதுகுவலி உடனடியாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வினோதமான வைத்தியத்தை முழுமையாக நம்பிய ஜாங், அருகிலிருந்த நீர்நிலையில் 8 சிறிய தவளைகளைப் பிடித்து, அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உயிருடன் விழுங்கியுள்ளார். தவளைகளை விழுங்கியபின் மூதாட்டி ஜாங்கிற்கு எதிர்பாராத விதமாக கடுமையான வயிற்று வலியும், குமட்டலும், உடல் சோர்வும் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரின் குடும்பதார்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்த தவளைகளின் எச்சங்களால் ஏற்பட்ட கடுமையான தொற்று மற்றும் செரிமானக் கோளாறுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக, மூதாட்டி ஜாங்கின் உடல்நிலை படிப்படியாக தேறி தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். யாருக்குத் தெரியும் இன்று டியூட்டி முடித்துவிட்டு அந்த மருத்துவரும் கூட இரவு உணவாக தவளை தான் சாப்பிட போறாரோ என்னவோ?
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.