”காதல் படம் எடுக்கும் போது சமூக பொறுப்புணர்வு வேண்டும்” – டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன்!
ஸ்ரீலட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி தயாரித்து வரும் 07—ஆம் தேதி ரிலீசாகவுள்ள படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. டைரக்டர் விஜய் ஸ்ரீயிடம் உதவி இயக்குனராக ‘பவுடர்’, ‘ஹரா’ படங்களில் பணியாற்றிய எஸ்.ஜே.என்.அலெக்ஸ் பாண்டியன் இப்படத்தின் மூலம் டைரக்டராக புரமோட் ஆகியுள்ளார். இப்படத்தில் கெளஷிக் ராம் என்னும் புதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். ஹீரோயினாக பிரதிபா, மற்ற கேரக்டர்களில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சில்மிஷம் சிவா, ஜனனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : பிரஹத் முனியசாமி, இசை : என்.ஆர்.ரகுநந்தன், பி.ஆர்.ஓ: நிகில் முருகன். கிறிஸ்டினா –கதிர்வேலனின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் அக்டோபர் 30—ஆம் தேதி மாலை நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் எஸ்.ஆர்.பிரபாகரன், மைக்கேல் ராஜா, விஜய் ஸ்ரீ, பிக்பாஸ் விஷ்ணு, சிபி ஆகியோர் வந்திருந்து படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
விழாவில் பேசிய சிலர்…
தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி,
“படத்தில் அனைவருமே புதியவர்கள் என்றாலும் தரமான படத்தை உருவாக்கியுள்ளார்கள். இதை மக்களிடம் கொண்டு செல்வது மீடியாக்களின் கைகளில் தான் உள்ளது”.
இணைத் தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன்,
“சமீபத்தில் கிராமத்துக் காதல் கதையை வைத்து தமிழில் படங்கள் வந்ததில்லை. இப்போது இந்தப் படம் அக்மார்க் கிராமத்துக் காதல் கதை”.

மியூசிக் டைரக்டர் என்.ஆர்.ரகுநந்தன்,
“ படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்த பிறகு தான் என்னிடம் வந்தார் டைரக்டர். அவர் எடுத்திருந்த மாண்டேஜை வைத்துத் தான் பாடல்களை உருவாகினோம். க்ளைமாக்ஸ் சீனில் டைரக்டரின் உழைப்பு என்னை வியக்க வைத்தது. இளம் தலைமுறைக்கு நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கார்”.
மைக்கேல் ராஜா,
“சின்னப் படங்களை எடுத்துத் தான் பெரிய டைரக்டர்கள் உருவாகிறார்கள். இப்படத்தின் டைரக்டர் அலெக்ஸ் பாண்டியனும் பெரிய டைரக்டராக வருவார்”.
எஸ்.ஆர்.பிரபாகரன்,
“மதம் சார்ந்து, சாதி சார்ந்து, மொழி சார்ந்து காதல் படங்களை எடுக்கும் போது டைரக்டர்களுக்கு சமூக பொறுப்புணர்வு வேண்டும். ஆனால் பல டைரக்டர்கள், தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல்களுக்காக பெற்றோர்களின் வலியைச் சொல்வதேயில்லை. அவர்களின் நியாயத்தையும் சொல்ல வேண்டும். அதான் பொறுப்புணர்வு”.
ஹீரோ கெளஷிக் ராம்,
”இந்தப் பட வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த பி.ஆர்.ஓ.நிகில் சாருக்கும் வாய்ப்பளித்த டைர்க்டருக்கும் மிகவும் நன்றி. எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் தான் நடந்தது. இந்தக் காதல் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்திற்கும் எனக்கும் ஆதரவு தாருங்கள்”.
டைரக்டர் அலெக்ஸ் பாண்டியன்,
“கேட்ட போதெல்லாம் பணத்தை வாரி வழங்கிய தயாரிப்பாளர் பிரபாகர் சாருக்கும் அதற்கு பேருதவியாக இருந்த இணைத் தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் சாருக்கும் நன்றி. படத்தின் தியேட்டர் வியாபாரத்திற்கு உதவிய எனது குருநாதர் விஜய் ஸ்ரீ சாருக்கும் நன்றி. படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியுடன் நல்ல படத்தை எடுத்துள்ளேன். இது மீடியாக்களுக்கும் மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”
— ஜெ.டி.ஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.