மூடப்பட்ட கிளைச்சிறைகள் ! மத்திய சிறைகளுக்கு புதிய தலைவலி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் அதிரடியாக 18 கிளைச்சிறைகள் மூடப்பட்ட விவகாரம், எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் நிறைந்திருப்பதாக எச்சரிக்கிறார்கள் சிறைத்துறை பணியாளர்கள்.

தமிழகத்தில் தற்போது 9 மத்திய சிறைகள்; 14 மாவட்ட சிறைகள்; 3 பெண்களுக்கான சிறைகள் மற்றும் 94 கிளைச்சிறைகள் இயங்கி வருகின்றன. முக்கிய வழக்குகள் மற்றும் தண்டனை கைதிகள் அல்லாத, சாதாரண வழக்குளில் கைது செய்யப்படுவோர் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இந்நிலையில்தான், மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போரூர், செய்யாறு, மேட்டுப்பாளையம், பரங்கிப்பேட்டை, ராசிபுரம், பரமத்திவேலூர், மணப்பாறை, முசிறி, கீரனூர், திருமயம், பட்டுக்கோட்டை, திருவாடனை, சிங்காநல்லூர், சாத்தூர், திருச்செந்தூர் உள்ளிட்டு 18 கிளைச்சிறைகளை அதிரடியாக முடியிருக்கிறது, தமிழக அரசு.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கைதிகளின் உடல்நிலை மற்றும் மனநிலையை காரணம் காட்டி, இதுபோன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்டோரையும் மத்திய சிறைகளில் அடைப்பது கைதிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என எச்சரிக்கிறார்கள்.

ஏற்கெனவே, குறுக்கும் நெடுக்குமான அதிரடி பணியிடமாற்றத்தால் குடும்பத்தை பிரிந்து மனச்சோர்வுகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் நிலையில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில், பதவி உயர்வில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில் சிறை காவலர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் பணியாற்றி வரும் சூழலில் சிறைக்குள் மோதலாக வெடிக்கும் அபாயத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முழுமையான வீடியோவை காண

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.