அது என்ன … கிளவுட் கிச்சன் Cloud Kitchen ? ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –29
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்த்து வருகிறோம். கடந்த இதழில், கேண்டீன் தொழில் குறித்து பார்த்தோம். மேலும், எங்கெல்லாம் கேண்டீன் வைக்கலாம் எனவும் தெரிந்து கொண்டோம்.
இந்த இதழில், மற்றொரு முக்கிய தொழில் வாய்ப்பு பற்றி காண்போம்.
Cloud Kitchen என்பது இன்று பரவலாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். அதுவும்,பெருத்தொற்று காலத்திற்கு பின்னால் இது நன்றாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. முதலில் Cloud Kitchen என்றால் என்ன என பார்ப்போம். Cloud என்றால் மேகம்தானே! மேகம் மறைத்த Kitchen போல என நாம் பொருள் கொள்ளலாம்.
இந்த கிட்சன் எங்கு இருக்கிறது என வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. Centralized Kitchen என்றால் ஒரு இடத்தில் சமைத்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்வது மற்றும் பரிமாறி வியாபாரம் செய்வது ஆகும். ஆனால், Cloud Kitchen என்பது, ஏதோ ஒரு இடத்தில் உணவை சமைத்து, வாடிக்கையாளர்களுக்கு உணவை அவர்கள் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதாகும். இவர்களுக்கு உணவகம், பரிமாறு இடம் என எதுவும் இருக்காது. ஆர்டரின் பேரில் நமது இடத்திற்கு உணவை டெலிவரி செய்வார்கள். இது Cloud Kitchen ஆகும். Online Delivery partners (Aggregators) என்பவர்கள் மூலம் இந்த Cloud Kitchen முறை நன்றாக செயல்படுகிறது. அதாவது Swiggy, Zomato போன்றவை ஆகும். மேலும், Facebook, Instagram என டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமும் உணவை டெலிவரி செய்கிறார்கள்.
இந்த முறையில், உணவகத்துக்கான இடம், முதலீடு ஆட்கள் என எந்த செலவும் தேவை இல்லை. FSSAI எனப்படும் உணவுக் கட்டுப்பாட்டு உரிமம் அவசியம். ஒரே கிட்சனில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள், மெனு வகைகள் என முடிவு செய்து விற்கலாம். அதற்கு தகுந்தாற்போல நாம் மார்கெட்டிங் செய்ய வேண்டும். உதாரணமாக, இந்திய உணவகம், சைனீஸ் உணவகம் இரண்டும் தனியாக வைப்பதற்கு பதிலாக, ஒரே Cloud Kitchen இடத்தில், இரண்டு மெனுவும், இரண்டு நிறுவன பெயர்களும் வைத்து, இரண்டு வகையாக மார்க்கெட்டிங்கும் செய்யலாம். இதன் மூலம், அதிகப்பணியாளர்களும் தேவைப்பட மாட்டார்கள்.
இன்றைய கால கட்டத்தில் பலர் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் ஆர்டர் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எந்த உணவகம் என்பதைவிட, உணவு எப்படி இருக்கிறது என்பதுதான் அவசியம் ஆகும். Online மூலம் பார்த்து தெரிந்து ஆர்டர் செய்வது எளிதாக இருப்பதால், இதனை மக்கள் விரும்புகின்றனர்.
நான் கடந்த மாதம் ஒருமுறை, சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் வரவேண்டி இருந்தது. எனக்கு புரோட்டீன் உணவுகள் சாப்பிட நினைத்தேன். Online மூலம் அதனை தேடினேன். நான் எழும்பூர் ரயில் நிலையம் வரும்பொழுது நுங்கம்பாக்கத்தில் ஒரு மெனு பார்த்தேன். ஆனால், அது Cloud Kitchen என தெரிந்து கொண்டதால், Online மூலம் ஆர்டர் செய்தேன். நான் மெட்ரொ ரயிலில் எழும்பூர் வரும் முன்னரே, எழும்பூர் நிலையத்தின் வாசலில் எனது உணவு வர வேண்டும் என ஆர்டர் செய்து விட்டேன். நான் எழும்பூர் வந்து ஓரிரு நிமிடங்களில் எனது உணவும் வந்து விட்டது. ராக்ஃபோர்ட் ரயிலில் அமர்ந்து நிதானமாக நான் உணவை ரசித்து உண்டேன்.
இந்த Cloud Kitchen உணவு எனக்கும் பிடித்திருந்தது. Cloud Kitchen நடத்துவதற்கு, மார்கெட்டிங் மிக முக்கியம். இல்லையெனில், நமது தொழில் யாருக்கும் தெரியாது. மேலும், தொடர்ந்து அனைத்து நாட்களும் ஆர்டர் இருக்கும் வகையில் நாம் சில நிறுவனங்கள் / வீடுகள் / முதியோர் போன்றோரை அணுகி ஆர்டர் எடுத்து வைத்தல் நமது தொழிலுக்கு தொடர் வியாபாரம் கிடைக்க வழிவகுக்கும்.
ஆட்கள், இடம், போன்ற செலவுகள் குறைவாக இருக்கும் தொழில் ஆகும். ஒரே நிறுவனத்தின் பெயரில் FSSAI உரிமம் எடுத்துவிட்டால், அந்த நிறுவனத்தின் கீழ் மூன்று Brand கள் வரை நாம் நடத்த முடியும். இதனால் உரிமம் எடுக்கும் வேலை, செலவு ஆகியவையும் குறையும். மெனு பற்றிய அறிவும், மார்கெட்டிங் பற்றிய அதீத வேகமும் உணவுத் தரம் பற்றிய சரியான நடைமுறையும் தெரிந்து அதை செயல்படுத்தும் திறனும் இருந்தால் இந்தத் தொழிலை சிறப்பாக செய்யலாம்.
தொடர்ந்து வரும் இதழ்களில் ஹோட்டல் சார்ந்த சில தொழில் வாய்ப்புகளை இன்னும் பார்ப்போம்.
தொடரும்
கபிலன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.