முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி முதல்வர் பதவி ஏற்றார் !
முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி முதல்வர் பதவி ஏற்றார் !
தமிழகத்தின் முதல்வர்கள் ராஜகோபாலாச்சாரி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் இன்று 23வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இணைந்தார். ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்று, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்த மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, விழா மேடைக்கு அழைத்து சென்றார். விழாவில் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார். முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று முதல்வர் பதவி பிராமணம் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் ரகசிய காப்பு பிரமாணமும் உறுதி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.