மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா ஏன் ?

0

தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டோடு அரசியலில் நுழைந்தவர் கமலஹாசன். மேலும் கட்சிக்கு மக்கள் நீதி மையம் என்று பெயர் சூட்டி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

அரசியலில் பங்கேற்ற பிறகு கமலஹாசன் சந்தித்த முதல் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இருந்தது. இந்த தேர்தலில் நகரப்பகுதிகளில் அதிகப்படியான வாக்கு வித்தியாசம் பெற்றது மக்கள் நீதி மையம். மேலும் கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கணிசமான வாக்கு பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. பல இடங்களில் நான்காவது இடம், பல இடங்களில் 5வது இடம், சில இடங்களில் மூன்றாவது இடம் என்று மக்கள் நீதி மையம் தமிழக தேர்தல் முடிவில் சொற்பமான ஓட்டுகளைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க நீதி மையம் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதே சமயம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒரு வல்லுநர் குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் `சங்கையா சொல்யூஷன்ஸ்’. இந்த நிறுவனத்துக்கு உரிமையாளர்களாக உள்ளவர்கள் விஜய் டிவி மகேந்திரன் என்பவரும் அதே விஜய் டிவியில் முன்பு வேலை பார்த்த சுரேஷ் ஐயர் என்பவரும்தான் என்கிறார்கள்.

இது மட்டுமல்லாது சிலர் சங்கையா சொல்யூஷன்ஸ் டீம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் மாதிரி தான். ஐபேக் நிறுவனத்துக்கு தலைமை பிரஷாந்த் கிஷோர். ஆனால், சங்கையா டீமோட தலைவர் கமல்ஹாசன் தான். கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க நீதி மையம் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் தேர்தலில் படுதோல்விக்கு காரணம் சங்கையா சொல்யூஷன் வகுத்த திட்டம் தான். தேர்தல் கூட்டணி குறித்து இவர்கள் கொடுத்த ஆலோசனையின் காரணமாகவே மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறோம், என்று சங்கையா சொல்யூஷனையும் மற்றும் துணைத் தலைவரான மகேந்திரனையும் வறுத்து எடுத்து இருக்கின்றனர்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர் . மகேந்திரன் , எம் . முருகானந்தம் , மௌரியா ஐபிஎஸ் ( ஓய்வு ) , தங்கவேல் , உமாதேவி , சி.கே.குமரவேல் , சேகர் , சுரேஷ் அய்யர் ( தேர்தல் வியூக அலுவலகம் ) ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர் .

இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த து.தலைவராக இருந்த மகேந்திரன் மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.