சுவர் ஏறி குதித்து பா. சிதம்பரத்தை கைது பண்ணிய சிபிஐ
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு திரும்பினார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களான பிரபல வக்கீல்களான கபில்சிபில், அசோக் சிங்வி உள்ளிட்டோரும் சிதம்பரத்துடன் வீட்டிற்குள் உள்ளே சென்றனர். இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் சிதம்பரத்தின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். சுமார் அரைமணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு சிதம்பரத்தை அவரது வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.