இலால்குடி தொகுதியில் அனைத்து கிராமக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதியில், 2006 , 2011 , 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி வருகிறார், எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன். நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முதன்முதலாக போட்டியிட்டு வென்ற தொகுதியும் அவரது சொந்த ஊர் அமைந்த தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக இலால்குடி கருதப்படுகிறது.

எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்இலால்குடி தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த கட்டிடத்தில் இயங்கிவந்த நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4.52 கோடி செலவில் வட்டாட்சியர் அலுவலகமும் நீதிமன்றம் மற்றும்  சார்பதிவாளர் அலுவலகங்களும் கட்டுமானப்பணிகள் முடிந்து திறப்பு விழாவை எதிர்நோக்கியிருக்கின்றன.

Sri Kumaran Mini HAll Trichy

நலத்திட்டங்கள்7 கோடியில் இலால்குடியில் அரசு மருத்துவமனை கட்டிடம்; 3.67 கோடியில் புள்ளம்பாடி பத்திரப்பதிவு அலுவலகம்; பூவாளூர் வாளாடியில் கால்நடை மருந்தகம் கட்ட ரூ 1.01 கோடி; அரசுப்பள்ளிகளுக்கான 21 வகுப்பறைகள், கழிவறைகள் கட்ட 5.50 கோடி; மற்றும் 58 பராமரிப்பு பணிகள் செய்திட 3.63 கோடி என 25 கோடியே 33 இலட்ச ரூபாயை பொதுப்பணித்துறையின்  சார்பில் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறார்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட 3.95 இலட்சம் உள்ளிட்டு 5025 பணிகளுக்கு சுமார் 234.76 கோடி ரூபாய் வரையில் முதலமைச்சரிடம் முறையிட்டு தனது தொகுதிக்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இலால்குடி தொகுதியில் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 245 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

நலத்திட்டங்கள்நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரான, காணக்கிளியநல்லூரில் புதிய காவல் நிலையம், புதிய பத்திரப்பதிவு அலுவலகம், துணைமின்நிலையம் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறார். காணக்கிளிய நல்லூர் குளம் மற்றும் பிரதான வாய்க்கால்களை புனரமைக்க 2.20 கோடிமற்றும் நத்தையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 9.23 கோடி ஒதுக்கீடு பெற்றுத் தந்திருக்கிறார்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாசன வாய்க்கால்களை நம்பி பாசனம் நடைபெறும் இத்தொகுதியில், 22.31 கோடி செலவில் பாசன வாய்க்கால்களை மேம்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மையை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு அய்யன், தெற்கு அய்யன், மலட்டாறு, கடுவாய், பங்குனி, பெருவளை, கூழையாறு, நத்தையாறு ஆகிய வாய்க்கால்களை 24 கோடி செலவில் புணரமைத்திருக்கிறார்.

நலத்திட்டங்கள்இலால்குடியை நகராட்சியாக தரம் உயர்த்திக் கொடுத்திருப்பதோடு, இலால்குடி நகராட்சிக்கு அலுவலக கட்டிடமும், பேருந்து நிலையமும் கட்ட 37.85 கோடி செலவில் சுமார் 7 ஏக்கர் அளவுக்கு நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இலால்குடி நகராட்சி அலுவலகம் கட்ட 4.27 கோடி; பேருந்து நிலையம் கட்ட 24.04 கோடி என இலால்குடி நகராட்சிக்கு மட்டுமே 104.6 கோடி செலவில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

நலத்திட்டங்கள்சமூக நலத்துறையின் வழியே 2.29 கோடி; 376 பவுன் நகைகள்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 15.48 கோடி; இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 4.2 கோடி; பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூராட்சிகளுக்க 5.3 கோடி ரூபாய்களை பெற்றுத்தந்திருக்கிறார்.

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 14 பாலங்களை கட்ட 32.20 கோடி; மணக்காலில் இரயில்வே மேம்பாலம் கட்ட 23 கோடி என நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மட்டும் 179.56 கோடிகளுக்கான வளர்ச்சித்திட்டப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

 

—   அங்குசம் அரசியல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.