அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சியில் பாரத் நகர், பூலாங்குடி காலனி, ஹேப்பி நகர், நரிக்குறவர் காலனி, பழங்கனாங்குடி, வடக்கு தேணேரிபட்டி, தெற்கு தேணேறிபட்டி, அரவக்குறிச்சிபட்டி, ஆகிய பகுதிகள் உள்ளது.
இதில் பூலாங்குடி காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பூலாங்குடி காலனி பாரத்நகர் கிளையின் சார்பாக நேற்று (10/05/2022) பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் டி ராணி தலைமை வகித்தார். எஸ்.சுதாகர், சி. விநாயகமூர்த்தி மல்லிகா குமார், ஆர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழுவை சேர்ந்த கே.சிவராஜ், தாலுகா செயலாளர் ஏ.மல்லிகா மாவட்ட குழுவைச் சேர்ந்த எஸ். தெய்வ நீதி,எம். முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பழங்கனாங்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.
அவர்கள் பேசுகையில் பூலாங்குடி காலனி 1வது மற்றும் இரண்டாவது வார்டுகள் மற்றும் பாரத் நகர் பகுதியில் நீண்ட காலமாக பழுதடைந்த தார் சாலைகளை அகற்றி புதிய தார் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும்,சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு புதிய சாலைகள் அமைத்து தரவும், பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வசதி செய்து தரவேண்டும், மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை வசதி செய்து தரவேண்டும், பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டியும், தெருவிளக்கு வசதி இல்லாத பகுதிகளுக்கு தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டியும் இதையெல்லாம் செய்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தி வரும் பழங்கனாங்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.
இதில் கட்சியின் ஒன்றிய குழுவை சேர்ந்த ஆர். குருநாதன், ஆர். பெரியசாமி, ஜி. ராமமூர்த்தி, எஸ். ஜமுனா தேவி, ஜெ.சித்ரா, எ.சுபாஷ் சந்திரபோஸ், உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.