அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி – காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித்தேர்விற்கு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 933 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) 366  பணிக்காலியிடங்களுக்கான அறிவிக்கை 04.04.2025 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக  எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.04.2025 அன்று புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேற்கண்ட பயிற்சிவகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.  ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycircletrichy@gmail.com என்ற  மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

முதல்வர் பிறந்தநாள்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி / அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.