சென்சாரில் சிக்கிய ‘மனுஷி’ & ‘பேர்ட் கேர்ள்’ – ’வெரி பேட்’ கண்டிஷனில்  வெற்றிமாறன்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இயக்குனர் வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில்  கோபி நைனார் இயக்கத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ படம் இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஓடும் அளவுக்கு ஃபைனல் ஃபுட்டேஜ் ரெடி பண்ணி  சென்சாருக்கு திரையிடப்பட்டது. படத்தில் ஏகப்பட்ட முற்போக்கு சிந்தனைகள், சங்கிகளை சாட்டையால் அடிக்கும்   வசனங்கள் இதெல்லாம் இருந்தால் சென்சாருக்குப் பிடிக்குமா என்ன? வெட்டு, கட் என படத்தைக் கொத்திக் குதறியதில் இரண்டு மணி நேரப் படத்தை காவு வாங்கிவிட்டது சென்னை மண்டல  காவி சென்சார் போர்டு.  இதனால் இப்போது மும்பையில் இருக்கும் ரிவைஸிங் கமிட்டிக்குப் போயிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் - கோபிநைனார்
வெற்றிமாறன் – கோபிநைனார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

எட்டு கோடி பட்ஜெட்டில் தயாரான ‘மனுஷி’யை அங்கே என்னபாடுபடுத்தப் போகிறார்களோ?

இதே வெற்றிமாறன், தனது உதவி இயக்குனர் வர்ஷா பரத்தை டைரக்டராக்கி  தயாரித்த ‘பேர்ட் கேர்ள்’ படமும் சென்சார் போர்டிடம் சிக்கி வெரி பேட் கண்டிஷனில் இருக்காம். இந்தக் கதையை எழுதி முடித்த வர்ஷா பரத்தை முதன்முதலில் அணுகியது அமேஸான் ஓடிடி பிளாட்பார்ம். ஏதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பேனர் இருந்தால் தாங்களே மொத்த பட்ஜெட்டையும் தருவதாகச் சொன்னதாம் அமேஸான். இதை தனது குரு வெற்றிமாறனிடம் வர்ஷா சொல்ல, தனது கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் பேனரைக் கொடுத்து அமேஸானின் அக்ரிமெண்டில் சைன் பண்ணியுள்ளார் வெற்றிமாறன்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எல்லா வேலைகளும் முடிந்த பின் வெற்றிமாறனுக்கும் ‘பெப்பே’ வர்ஷாவுக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டது அமேஸான். ஆனாலும் அசராத வெற்றி, தனது சிஷ்யைக்காக , இந்தி சினிமாவின் பிரபல இயக்குனரும் தனது நெருங்கிய நண்பருமான அனுராக் காஷ்யப்புடன் கைகோர்த்து ஃபைனான்ஸை இறக்கி முழுப்படத்தையும் தயாரித்து முடித்து, டிரைலர் ரிலீஸுக்காக சென்சாரிடம் போன போது, டிரைலரையே கொத்திக் குதறியது மட்டுமல்லாமல், இரண்டு நிமிட டிரைலருக்குக் கூட சர்டிபிகேட் தர மறுத்துவிட்டது சென்சார்.

வெற்றிமாறனுடன் வர்ஷா பரத்
வெற்றிமாறனுடன் வர்ஷா பரத்

இப்போது முழுப்படமும் சென்சாருக்குப் போயுள்ளது. என்னபாடுபடுத்தப் போகிறார்களோ? இந்தப் படத்திற்குப் போட்ட ஆறு கோடி பட்ஜெட் என்னாகுமோ? என்ற படபடப்பிலும் பரிதவிப்பிலும் அப்செட்டாகியுள்ளார் வெற்றிமாறன்.

இப்படி சென்சாரின் அக்கப்போர்கள் ஒருபக்கம் தொடர்ந்தாலும் , கலைப்புலி தாணு தயாரிக்கும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் வேலைகளில் படுஜோராக இறங்கிவிட்டாராம் வெற்றிமாறன்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.