
சர்வதேச அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் இரண்டாவது பரிசு ! மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
சர்வதேச அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் மாஸ்டர் முத்துமாரி இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பம், வளரி, உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார்இந்த நிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வைத்து மாவட்ட அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற சிறுவர்களை மாநில அளவில் நடைபெற்ற வளரி போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் ஜெய் கிருஷ்ணா ஆகிய இரு மாணவர்கள் தேர்வு பெற்றனர்இவர்களுக்கு மாஸ்டர் முத்துமாரி தீவிர பயிற்சி அளித்தார். கடந்த வாரம் உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா சிகே ஓவல் கிரிக்கெட் கிரவுண்டில் சர்வதேச அளவில் வளரி போட்டி நடைபெற்றது இதில்
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டெல்லி, நெய்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த , ரோஜர் பெரி ,கெளஷிக், ஹோண்டாஆகிய இருவர் முதல் பரிசும், தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஜெய் கிருஷ்ணா, சிவகார்த்திகேயன் இருவரும் இரண்டாம் பரிசும் பெற்று தமிழ்நாட்டிற்கு, மதுரைக்கு வளரி கலைக்கு பெருமை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇரண்டாம் பரிசு பெற்று மதுரை வந்த சிவகார்த்திகேயன் ஜெய் கிருஷ்ணா இருவரையும் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
பயிற்சியாளர் முத்துமாரி கூறும்போது. மாணவர்களுக்கு சிலம்பம், வளரி உள்ளிட்டவைகளை இலவசமாக கற்றுத் தருவதாகவும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர் வீரர்கள் வளரி கருவியை பயன் படுத்தினர்.

அந்தக் கருவியானது கால சூழ்நிலையில் மறைந்து போகும் நிலையில் உள்ளது. இதனால் இப்போதுள்ள மாணவர்கள் இந்த வளரிகலையை பயன்படுத்த வேண்டும். என்பதற்காக பயிற்சி அளித்து வருவதாகவும், அழிவின் விழிம்பில் உள்ள வளரி பயிற்சியை தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளிக்க தமிழக அரசு உதவி செய்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அதோடு சிலம்பத்துக்கும் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது போல் வளரி கலைக்கும் அங்கீகாரம் அளித்து இட ஒதுக்கீடு கொடுத்து இந்த வளரியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வளரி கலையே மாணவ மாணவிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தது காமராசர் பல்கலைக்கழகம் அதை தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரி முதன்மை பெற்ற கல்லுாரியில் வளரி கலைக்கு முதல் அங்கீகாரம் பெற்றது மதுரை மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது , அரசு பாதுகாப்பு விதிமுறைகள் பின் பற்றி சட்ட ஒழுங்கு உதவிகள் முறைப்படி வளரி பயிற்சி அளிக்க படுகிறது என்றார்.
-சாகுல்