தொடரும் பயணிகள் அவமதிப்பு…. இந்த முறை திருச்சியில்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தொடரும் பயணிகள் அவமதிப்பு…. இந்த முறை திருச்சியில்…

பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் அல்லாமல் காவல்துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று திருச்சி இனாம்குளத்தூர் வழித்தட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இழிவாக பேசுவது, தரக்குறைவாக நடத்துவது என்பது காலம் காலமாக தொடர்கதை ஆக உள்ளது .

அங்குசம் இதழ்..

அதுவும் இலவச பேருந்து பயண அனுமதி கொடுத்ததற்கு பிறகு பயணிகள் நிலை படு கேவலமாக மாறிவிட்டது.
அமைச்சர் பொன்முடி பேசிய ஓசி பஸ் பயணம் என்ற வார்த்தை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வார்த்தையை நிரூபணம் செய்வது போல தமிழகத்தில் ஆங்காங்கே சில சில சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஓடிசென்று பேருந்தில் ஏறும் காட்சி
ஓடிசென்று பேருந்தில் ஏறும் காட்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கோவை ,சேலம், தஞ்சாவூர் என்று இலவசமாக பயணம் செய்யும் பயணிகளை நடத்துனர்கள் கேவலமாக பேசும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இது குறித்து தகவல் தெரிய வரும்போது மட்டுமே ஓட்டுனர் மற்றும் நடத்தினர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்றாலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பாணியை கைவிடாமல் பயணிகளை கேவலப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
இதை நிரூபிப்பது போலவே திருச்சியிலும் இந்த சம்பவங்கள் தொடர் கதையாக நடக்கின்றன.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ராம்ஜி நகர் வழியாக இனாம் குளத்தூர் வழித்தடத்தில் 120 ,120m, 120 ,1g ,உள்ளிட்ட பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இனாம்குளத்தூர் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நிற்காமலே சென்ற பேருந்து
நிற்காமலே சென்ற பேருந்து

இந்த நிலையில் இந்த தடத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள், திருச்சியில் பணியாற்றுவோர் காலையில் மற்றும் மாலை நேரங்களில் உரிய பேருந்து வசதி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் . இனாம் குளத்தூரில் இருந்து திருச்சிக்கு வரவேண்டும் எனில் காலை ஏழு மணிக்கே புறப்பட்டால்தான் 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து சேர முடியும் என்ற இக்கட்டான நிலை உள்ளது. பள்ளி கல்லூரி வேலை நாட்களில் இந்த தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் மாணவ மாணவிகள் கூட்டத்தோடு பொதுமக்களும் அதிக அளவில் ஏறுவதால் பேருந்துகள் அனைத்தும் தொங்க தொங்க செல்கின்றன .

இவ்வாறு கூட்டத்தோடு வரும் பேருந்துகள் பெரும்பாலும் வழித்தடத்தில் இடை இடையே உள்ள நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் விரைவாக சென்று விடுகின்றன. அதேபோல இந்த தடத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். பேருந்துகளில் ஏறும் பெண்களை வா, போ என்று மரியாதை குறைவாக பேசுவதுடன் அவர்கள் லக்கேஜ் ஏதும் வைத்திருந்தால் அதற்கு கட்டணம் கட்ட வேண்டும் என்று மற்ற பயணிகள் முன்னிலையில் அவமானம் செய்யும் வகையில் பேசுகின்றனர் .
இது தவிர குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ் ஏன் நிற்கவில்லை என்று கேட்டால் அலுவலகத்தில் போய் கேள்… உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… என்று நடத்துனர்கள் பயணிகளை எகிறுகின்றனர்.

இந்தத் தடத்தில் உள்ள ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் குறைந்தது 40 பயணிகள் வரை பேருந்துக்காக காத்திருப்பதை கண்கூடாக நம் காணமுடிகிறது. எனவே இந்த தடத்தில் பீக் அவர் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள் பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளர் கவனிப்பாரா….

 

-அரியலூர் சட்டநாதன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.