கொரியர் வாகனத்தில் தீ விபத்து ! பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!
சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் கொரியர் திருநெல்வேலி பகுதியில் உள்ளது, சம்பவத்தின் போது திருநெல்வேலியில் இருந்து டிவி, பிரிட்ஜ், பேட்டரி மற்றும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களை ஏற்றுக்கொண்டு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 2 மணி அளவில் சாத்தூர் டோல்கேட் அருகே திடீரென லாரியில் மூடப்பட்ட கண்டனர் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார்த்தி லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்