இன்றைய இந்தியாவை புரிந்து கொள்ள அந்த மூன்று கேள்விகளை கேளுங்கள் ! மதுரை மாநாட்டில் பிரகாஷ் காரத் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொதுவில், மார்க்சிஸ்ட் கட்சி என்றழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல்-02 தொடங்கிய மாநாடு, ஏப்ரல்-06 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

இம்மாநாட்டில், பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், ”பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட்டணியை எவ்வாறு திறம்பட எதிர்த்துப் போராடுவது என்பதுதான் சவலானது” என்றார்.

 

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

மாநாட்டில் பிரகாஷ் காரத்
மாநாட்டில் பிரகாஷ் காரத்

மேலும், ” பழந்தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் பண்பாட்டின்  செழுமையும் எட்டு தசாப்தங்களுக்கும் மேலான தொழிலாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை ஒருங்கிணைக்கும் நகரமான மதுரையில் இந்த மாநாட்டை நடத்துவது பொருத்தமானது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த வேளையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களான ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரியா, ஜானகி அம்மாள் ஆகியோரை நினைவு கூர்வோம். இவர்கள் அனைவரும் மதுரையிலும் தமிழகத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர்கள். இந்த கட்சி மாநாடு எங்களுக்கு ஒரு கடினமான தருணத்தில் நடைபெறுகிறது.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின்  தலைமையில் கட்சி காங்கிரஸிற்கான ஏற்பாடுகள் தொடங்கிய சமயத்தில், நம்மை விட்டு பிரிந்தார். இந்த எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொண்டு 24வது மாநாட்டை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றமத்தியக் குழுவும் கூட்டாகவும், ஒற்றுமையாகவும் உழைத்துள்ளன. மார்க்சியத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையில் தோழர் சீதாராமின் தனித்துவமான பங்களிப்பை என்றென்றும் போற்றுவோம்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

கட்சி காங்கிரஸின் முக்கிய வேலை, ஒரு அரசியல் தந்திரோபாயத்தை உருவாக்குவதாகும். இது கட்சியின் அரசியல் பணிக்கான திசையை அமைக்கும்.  இதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையின் சாராம்சம் அரசு மற்றும் ஆளும் கட்சியின் வர்க்க இயல்பு, நிலவும் வர்க்க சக்திகளின் சமநிலை ஆகியவற்றை சரியாகப் புரிந்துகொள்வதுஅவசியம். இந்த பயிற்சி சில நேரங்களில் சிக்கலானதாக இருக்கலாம். ஆனால், தற்போதைய தருணத்தில் இது ஒப்பீட்டளவில் எளிமையானது . மூன்று கேள்விகளைக் கேளுங்கள்.

1.டொனால்ட் ட்ரம்பின் நண்பர் என்று கூறுவது யார்?

2)கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்?

3)ஆர்எஸ்எஸ்ஸுக்கு யார் முழு விசுவாசம்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் நரேந்திர மோடியும் பாஜகவும்தான். பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும். இந்துத்துவா-கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிஜேபி – ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டுக்கு அடிகோலுவதுதான் போராடி தோற்கடிக்கப்பட வேண்டும் .இவ்வளவு சுலபமான முடிவுக்கு வருவதிலிருந்து, பிஜேபி-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எவ்வாறு திறம்பட எதிர்த்துப் போராடுவது என்ற சிக்கலான கேள்வி எழுகிறது என்றார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.