மதுரை மண்ணில் எம்.எஸ். தோனி … கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் !
மதுரை சிந்தாமணி அருகே தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, அக்-09 அன்று மதுரை வந்திருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் தனி விமானத்தில் மும்பை திரும்புகிறார்.
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி வருகையொட்டி காலை முதலே அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தோனி வருகையை ஒட்டி விமான நிலையத்தில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், மதுரை விமான நிலையத்திலிருந்து வெள்ளை நிறம் கொண்ட ஏழாம் நம்பர் காரில் தோனி பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.