சினிமா ஆசை…. திரள்நிதி பரிதாபங்கள் … ! வீடியோ செய்தி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சினிமா ஆசை திரள்நிதி பரிதாபங்கள் ! ”மோசடிகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்” என்று மெட்டெடுத்து பாடலே பாடிவிடலாம் போல. அரதப்பழசான மோசடி தொடங்கி ஹைடெக்கான டிஜிட்டல் மோசடி வரையில் நாளும் புதுப்புது மோசடிகளை எதிர்கொண்டு வருகிறோம்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முகம் தெரியாத நிதிநிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு, அல்லோகலப்படுவது ஒரு வகை. உயிர்காக்கும் உயர் மருத்துவ சிகிச்சைக்கு, கல்விச் செலவுக்கு, ஏழ்மை போக்குவதற்கு என்று நமது இரக்கக் குணத்தை குறிவைத்து ”க்ரவுட் பண்டிங்” crowdfunding என்ற பெயரில் வசூலிப்பது புதுவகை மோசடியாகவே மாறியிருக்கிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சினிமா ஆசை பரிதாபங்கள்
சினிமா ஆசை பரிதாபங்கள்

அடுத்தவேளைச் சோற்றுக்கே வழியில்லாத ஒருவரால், இலட்சக்கணக்கில் செலவழித்து உயிர்காக்கும் உயர்சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? அடுத்து ஒரே நபரால் அவ்வளவு தொகையை உதவி செய்ய முடியாத நிலையில் தலைக்கு பத்து ரூபாய் போட்டாலும் பத்து பேர் சேர்ந்தால் பெருந்தொகையாகிவிடும். இதை‌ குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? என்பது உங்களது வாதமாக இருக்கலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கே நாம் செய்யும் சிறு உதவி சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கும் உதவி செய்ய முன்வருபவருக்கும் இடையில் இடைத்தரகரைப் போல, “க்ரவுட் பண்டிங்” நுழைவதுதான் இங்கே சிக்கல்.

என்ன வசூலானது? என்ன செலவானது? மீதமுள்ள பணத்தை என்ன செய்தார்கள்? என்ற கேள்வியை எவரும் கேட்பதுமில்லை; அவர்களாகவும் வெளியிடுவதுமில்லை. எந்தவிதமான கண்காணிப்புக்கும் தணிக்கைக்கும் உட்படாததே இதன் மையமான சிக்கல்.

கோபி - சுதாகர்
கோபி – சுதாகர்

இதுபோல, ஆபத்துக்கு உதவி செய்வதிலேயே இவ்வளவு சிக்கல் இருக்கிறது என்கிற பொழுது, இதே “க்ரவுட் பண்டிங்” முறையில பணத்தை வசூலித்து படம் எடுக்கிறேன் என்று கோடிக்கணக்கில் வசூலித்த குற்றச்சாட்டில் பரிதாபங்கள் சுதாகர் – கோபி சிக்கியிருக்கும் சம்பவமே எடுப்பான எதிர்மறை உதாரணமாகியிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை முடிவுக்கு வராத இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதாக A2D யூடியூப் சேனலில் தோன்றி அவர்கள் இருவரும் கூட்டாக விளக்கமளித்திருக்கிறார்கள்.

பிரவீன் ஜெயக்கொடி என்பவர் 2018 ஆம் ஆண்டு கேரள புயல் வெள்ளத்தின்போது தங்களை அணுகியதாகவும்; க்ரவுட் பண்டிங் முறையில் பணம் வசூலித்து கேரள வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய இருப்பதாகவும் அது தொடர்பான விளம்பரத்தை தங்களது பரிதாபங்கள் சேனலில் வெளியிட வேண்டுமென்று கோரியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறே அவர்கள் மனிதாபிமான அடிப்படையில், அவருக்கு உதவி செய்ததாகவும், அவரும் அதேபோல வசூலித்த பணத்தில் செய்த நிவாரண உதவிகளை நேரடியாக கேரள முதல்வரிடம் ஒப்படைத்த புகைப்பட ஆதாரங்களையும் காட்டியதாகவும்; அதை அப்படியே நம்பியதாகவும், அடுத்து அதுபோலவே கஜா புயலின்போது க்ரவுட் பண்டிங் முறையில் நிதி உதவி கோரி பரிதாபங்கள் சேனலில் விளம்பரம் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

பரிதாபங்கள் சேனல்
பரிதாபங்கள் சேனல்

இந்த பழக்கத்தின் அடிப்படையிலிருந்துதான், சுதாகர் – கோபி ஆகியோரிடம் இருந்த சினிமா ஆசைக்கு தூபம் போட்டு, “நீங்கள் ஏன் தயாரிப்பாளர்களைத் தேடிப் போகிறீர்கள்? உங்கள் சந்தாதாரர்களிடமே கேட்கலாமே?” என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறார், பிரவீன் ஜெயக்கொடி.

அவர் சொன்னது போலவே, இவர்களும் ஒத்திசைந்து க்ரவுட் பண்டிங் முறையில் பணம் வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தொடக்கத்திலேயே 1.21 கோடி வசூலாகியிருக்கிறது. இது இவர்கள் எடுப்பதாக தீர்மானித்த படத்தின் பட்ஜெட்டுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே, மீண்டும் சில முயற்சிகள் செய்து 1.84 கோடி வரை உயர்ந்திருக்கிறது. இதை வைத்து தனியே ஆபிஸ் போட்டு பட வேலைகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

கூடுதலான பணத்தேவைகளுக்கு பிராண்டட் ஃபான்சர் முறையில் பணம் வசூலிக்கலாம் என்ற ஆலோசனையையும் கொடுத்திருக்கிறார் பிரவீன் ஜெயக்கொடி. அந்த முயற்சி நல்ல பலனை தர 6.4 கோடி வரை வசூலாகியிருக்கிறது.
இதன்பிறகுதான், பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது.

கோபி - சுதாகர் சேனல்
கோபி – சுதாகர் சேனல்

இவர்கள் கேட்ட நேரத்தில் பிரவீன் ஜெயக்கொடி வசூலான பணத்தை கொடுக்கவில்லை. அதனால் பட வேலைகள் பாதிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறு வசூலான பணத்தை கொடுப்பதில் காலம் தாழ்த்துவதில் சந்தேகப்பட்டு அவர் ஏமாற்றுகிறார் என்று அப்போதுதான் புரிய வந்தது என்கிறார்கள். அதன்பிறகே, கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தோம் என்கிறார்கள்.

அவரிடமிருந்து 25 – 30 இலட்சம் வரையில் தான் மொத்தத்தில் வாங்கியிருப்போம் என்கிறார்கள். பணத்தை திருப்பித் தருவது இருக்கட்டும், இதுவரை எவ்வளவு வசூலானது? யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலையாவது கொடுங்கள் என்று கேட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு அவர் கொடுத்த கணக்கு வழக்குகளிலும் ஏகப்பட்ட குளறுபடி இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

வீடியோ லிங்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில், பிரவீன் ஜெயக்கொடி வேறொரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையில், இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் இருந்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். இவர்களும் இவர்கள் தரப்பில் இருந்த ஆவணங்களை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பரிதாபங்கள் சேனலையே விற்றுவிட்டு, பணத்தை செட்டில் செய்ய முயற்சித்ததாகவும்; பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக படத்தை முடித்தே திருப்பிக் கொடுப்பதென முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். யூடியூப் வருமானத்தையும் போட்டு படத்தை மெல்ல நகர்த்தி வருவதாகவும் இதனாலேயே படம் இத்தனை ஆண்டுகாலம் தாமதமானதாகவும் தெரிவிக்கிறார்கள்.

கோபி - சுதாகர் சேனல்
கோபி – சுதாகர் சேனல்

“ பணத்தை திரும்பக் கேட்ட சிலருக்கு பணத்தை கொடுத்திருக்கிறோம். உங்களையெல்லாம் ஏமாற்றி அந்த காசை வச்சி வாழனும்னு ஆசப்படலை. நாங்கள் ஏமாந்தோம்.” என்கிறார்கள் இருவரும்.

இவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால், “என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்கள்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் இதுவரை விவரித்ததில் இருந்து மிக எளிமையாக புலப்படும் விசயம், பிரவீன் ஜெயக்கொடி என்பவர் தொடக்கம் முதலாகவே, பக்கா பிசினஸாகவே அணுகியிருக்கிறார் என்பதே.

கேரள வெள்ளம், கஜா புயல் போன்று மக்கள் துயரை மூலதனமாக்கி வசூல் செய்ததைப் போலவே, பரிதாபங்கள் கோபி – சுதாகருக்கு இருந்த சினிமா ஆசையைத் தூண்டிவிட்டு அவர்களின் பரவலான வெகுஜன அறிமுகத்தையே மூலதனமாக்கியிருக்கிறார் பிரவீன் ஜெயக்கொடி.

கேட்டவுடன் இத்தனை கோடிகளை வாரியிறைத்த மக்களுக்கு பிரவீன் ஜெயக்கொடி யாரென்றே தெரியாது. கூகுள் பே-யில் பத்து ரூபாயை அனுப்பி வைத்திருந்தாலும், அது பரிதாபங்கள் கோபி – சுதாகர் ஆகிய இருவருக்காகவும்தான்.
இப்போது அவர்கள் தங்களது பொறுப்பை துறக்கவில்லை என்ற போதிலும், இத்தனை ஆண்டு காலம் இதுதான் நடந்தது என்று ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு விடையில்லை.

வீடியோ லிங்

மிக முக்கியமாக அவர்களுக்கு சொந்தமாக பரிதாபங்கள் சேனல் இருக்கிறது. ஒவ்வொரு முறை வீடியோ பதிவிடும் போதும் நூறில் ஒரு கமெண்ட் க்ரவுட் ஃபண்ட் பற்றியதாக இருந்தும் இதுவரை வாய் திறந்த தில்லை. இப்போது அடுத்தவன் சேனலில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் எடுத்து வருவதாக சொல்லப்படும் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் இந்த விளக்கம் வெளியாகிறது.

இப்போதும்கூட, அவரை நம்பி இறங்கினோம். அவரால் ஏமாற்றப்பட்டோம். இதுதான் நடந்தது. என்பது வரையில் சொல்லிவிட்டீர்கள். போலீசில் கொடுத்த புகார் என்ன ஆனது? அவர் மீது ஏன் இன்னும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை? அவருடைய பின்னணிதான் என்ன? அவருடைய முகத்தைக்கூட இன்னும் காட்டவில்லையே?
எங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களது ஊடக வெளிச்சத்தை பயன்படுத்தி உங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டார். சேர்ந்தே அவனது சட்டையைப் பிடிப்போம் என்று பேச்சுக்குக்கூட சொல்ல மறந்தது ஏன்? இதற்கு விடையில்லையே?

ஏற்கெனவே, இதுபோலவே பச்சை மனிதன் என்றொரு படம் எடுக்க முயற்சித்து, அது படுபாதாள தோல்வியை சந்தித்ததை அறியாதவர்களா, கோபியும் சுதாகரும்? இன்னும் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. ஒருவேளை, எதிர்பார்த்தபடி எடுத்த படம் ஓடாமல், நட்டமாகிவிட்டால் என்ன முடிவெடுப்பார்கள்?

கோபி - சுதாகர் சேனல்
கோபி – சுதாகர் சேனல்

அவர்களது சொத்தை விற்றாவது பணத்தை திருப்பிக் கொடுத்துத்தான் ஆக வேண்டுமென்று மல்லுக்கு நிற்கவில்லை. தங்களது ஒற்றை கோரிக்கையை ஏற்று, முகம் தெரியாத பலரும் போட்ட கோடிக்கணக்கான பணத்தை அள்ளி வீசினார்களே, அந்த மக்களுக்கு உண்மையாக இருந்திருக்க வேண்டாமா? என்பதே, நாம் எழுப்பும் மையமான கேள்வி.

நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏமாந்து இருந்தால், அது உங்கள் இருவரது தனிப்பட்ட பக்குவமின்மை; ஏமாளித்தனம் என்பதாக கடந்து போய்விடலாம். உங்களை நம்பியல்லவா, இத்தனை கோடிகளை கொட்டியிருக்கிறார்கள். உங்களது ஆர்வக்கோளாறு, ஆயிரக்கணக்கானோரை பாதிப்பில் ஆழ்த்தியிருக்கிறதே, அதற்கு என்ன பதில்?

“நாங்களே இன்னொருவரிடம் ஏமாந்துவிட்டோம். பணத்துக்கு எங்கே போவோம். அவ்வளவுதான்.” என்று கைகழுவிப் போகாமல், “நாங்கள் எப்படியாவது உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவோம்.” என்று நீங்கள் சொன்ன வார்த்தைகளே பெரிசு என்று பெருந்தன்மையாக கடந்து போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன?

திரள் நிதி என்றாலே சர்ச்சைக்குரியதுதானே. சமீபத்தில் சீமான் – வருண்குமார் ஐ.பி.எஸ். விவகாரத்தில் கூட, திரள் நிதி என்ற வார்த்தை வறுபட்டது நினைவிருக்கலாம். நிதி நிறுவன மோசடிகளின் பட்டியலில், “கிரவுட் பண்டிங்” கும் சேர்க்கப்பட வேண்டும். முறையான கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற தேவையை முன்மொழிந்திருக்கிறது, சுதாகர் – கோபிக்கு நேர்ந்த ”பரிதாபங்கள்” !

– இளங்கதிர்.

வீடியோ லிங்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.