அங்குசம் சேனலில் இணைய

காதலரை வாடகைக்கு எடுக்கும் கலாசாரம்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், “காதலனை வாடகைக்கு பெறுவது” அல்லது “காதலியை வாடகைக்கு விடுவது” போன்ற கலாச்சாரங்கள் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலமாகி வருகின்றன.

இந்த நிலையில், டோக்கியோவில் தனியாக வசிக்கும் ஆஸ்திரேலியப் பெண் சாரா, தனது தனிமையை எதிர்த்து போராட வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமையில் இருந்த பிறகு, வாடகைக்கு ஆண் நண்பர்களை வழங்கும் ஒரு வலைத்தளத்தை அவள் கண்டுபிடித்தாள். அதில் 26 வயது நருமி என்ற நபருடன் இரண்டு மணி நேர டேட்டை முன்பதிவு செய்தார் சாரா. அந்தத் தேதிக்கான செலவு £150 (சுமார் இந்திய மதிப்பில் ரூ.18,000), கூடுதல் செலவுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். மேலும் அதைப் பற்றிய அனுபவங்களை யூடியூப்பில் வீடியோவாக பகிர்ந்து உள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அந்த வீடியோவில்  இருவரும் டேட்டிங்கிற்கு செல்லுகையில் இந்த சேவை குறித்து பேசியுள்ளனர். இவ்வாறு சேவை வழங்குவது ஏமாற்று வேலையல்ல; மாறாக, இது ஒரு வேலை என்று நருமி கூறியுள்ளார். மேலும், ஜனவரி 2024 முதல் இந்த வேலையில் தான் பணியாற்றி வருவதாகவும், வழக்கமாக ஒரு மாதத்திற்கு சுமார் 10 பெண்களுடன் டேட்டிங் செல்வதாகவும் நருமி தெரிவித்துள்ளார்.

இந்த சேவைகள் குறித்து வெளியான தகவல்களின்படி, Rent a Boyfriend, Rent a Girlfriend போன்ற நிறுவனங்கள் அழகிய ஆண்கள் மற்றும் பெண்களை வாடகைக்கு வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் அவர்களை உணவகங்களில் அழைத்துச் செல்லலாம், சினிமா பார்க்கலாம் அல்லது நண்பர்களைப் போலக் கலந்து பழகலாம். ஆனால், இந்த சேவைகள் முழுக்க ‘தோழமை அனுபவம்’ மட்டுமே. உடலுறவு அல்லது ஆபாச தொடர்புகள் அனுமதிக்கப்படவில்லை என நிறுவனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

   —  மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.