டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம்!

தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் கடந்த மே 20-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த ‘குட்டி ‘ விவேக் என்ற இரண்டு மீன் வெட்டும் தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பிணக்கூராய்வு முடிவில் அவர்கள் இருவரும் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சரக்கு பாட்டிலுக்குள் சயனைடு கலந்தது எப்படி என்ற கேள்விக்கான விடைதான் இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்குள்ளாக, ஜூன்-12 அன்று மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த தத்தங்குடியைச் சேர்ந்த பழனி குருநாதன் (55), பூராசாமி (65) ஆகியோரும் டாஸ்மாக் சாராயம் குடித்த நிலையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்து போயிருக்கிறார்கள். திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிணக்கூராய்வு செய்யப்பட்டதோடு, அவர்கள் அருந்திவிட்டு மிச்சம் வைத்திருந்த மதுப்பாட்டில்கள் கைப்பற்றபட்டு தடய அறிவியல் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது

திருச்சி மண்டல தடயவியல் துறை துணை இயக்குநரின் அறிக்கையின்படி, உயிரிழந்த இருவரது ரத்தம் மற்றும் உள்ளு றுப்புகளில் சயனைடு கலந்திருப்பது கண்ட றியப்பட்டுள்ளது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி. தஞ்சாவூரில் மதுகுடித்து இருவர் இறந்தபோதும், இதேபோலவே ”சயனைடு கலந்த மதுவைக் குடித்ததே இவ்விருவரின் சாவுக்கு காரணம் என viscera test-ல் தெரிய வந்துள்ளதாக” அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அடுத்தடுத்து, நால்வர் டாஸ்மாக் சாராயம் குடித்து மர்மமான முறையில் இறந்த நிலையில், அவர்களது உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், சரக்கில் சயனைடு கலந்தது எப்படி என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவசரம் அவசரமாக மாவட்ட ஆட்சியர்களே முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள்.

இதைவிடக்கொடுமை என்னவெனில், தஞ்சை விவகாரத்தில் நகைவியாபாரிகளிடம் தொடர் விசாரணை என்ற பெயரில், ‘குற்றத்தை ஒத்துக் கொள்ளுமாறு மிரட்டி துன்புறுத்துவதாக’ நகைவியாபாரிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக் கின்றனர்.
மயிலாடுதுறை சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள்கூட முழுமையடையாத நிலையில், பழனி குருநாதனின் தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான வே.மனோகரன், வே.பாஸ்கரன் ஆகியோர்தான் சொத்து தகராறு காரணமாக, மதுவில் சயனைடு கொடுத்து கொன்றார்கள் அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

“டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கி குடிச்ச அந்த சரக்குலதான் ஏதோ கோளாறு இருந்திருக்கு. ஆனா அதுபத்திய உண்மைய சொல்லாம அரசு அதிகாரிகளும் போலீஸாரும் மறைக்கிறாங்க. இச்சம்பவம் குறித்து தமிழக போலீஸார் நடத்தும் விசாரணை திருப்திகரமாக இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்ய விருக்கிறோம்” என்கிறார் தஞ்சையில் மது குடித்து இறந்துபோன குப்புசாமியின் உறவினரும் வழக்கறிஞருமான நாகேந்திரன்.

-இர்ஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.