அரசு பென்ஷனா், முதியோர், விதவைகளை குறி வைக்கும் சைபா் கிரைம் கும்பல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உஷாரா இருங்க!

வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் கது, சிறைவாசம் என்ற குற்ற சம்பவங்கள் போய் இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் திருடும், சைபா் குற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவிட்டன. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சைபா் கிரைம் புகார்கள் பதிவாகின்றன.

அங்குசம் இதழ்..

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டக்கில் தேசிய சைபர் கிரைம் புகார் மையத்தில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகின.  மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் அப்பாவிகள் இழந்த பணம் ரூ. ஆயிரத்து 750 கோடி.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ஆயிரத்து 679 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள். இவற்றில் ரூ.189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆன்லைன் பங்கு வர்த்தகம், கூரியர், ஸ்கைப் மோசடி, போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி, திருமண மோசடி, பரிசு மோசடி என பட்டியல் நீள்கிறது. சமீபகாலமாக, சிபிஐ பெயரைச் சொல்லி நடந்துவரும் மோசடி, ஓய்வுகால பலனாக பெற்ற பணத்தை தன்வசம் வைத்துள்ள முதியவர்களை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.

ஏடிஜிபி அலர்ட்: இது தொடர்பாக, மாநில சைபர் கிரைம் குற்ற தலைமையக கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் கூறியிருப்பது: ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் பேசுவதாக சொல்லி மோசடியி்ல் பணத்தை இழந்ததாக பல புகார்கள் வருகிறது. மூத்த குடிமக்களை செல்போன மூலம் தொடா்பு கொண்டு, மாற்று திறனாளி திட்டம், வயது முதிர்ந்தோர் ஒய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பெற உதவுவதாக கூறி சைபர் கிரைம் மோசடி கும்பல்கள், செல்போனில் மோசடி செய்து வருகின்றன. இது தொடா்பாக கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரை 28 புகார்கள் தெசிய சைபா் கிரைம் புகார் மையத்தில் பதிவாகின

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மோசடிக்காரர்கள். அதிகாரிகள் என தங்களை செல்போனில் அறிமுகப்படுத்தி அப்பாவி மக்களை கொண்டு, திறனாளி நடப்பு வயது முதிர்ந் தோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் தங்களுக்கு பணம் வந்துள்ளது என்று கூறி கவர்ந்திழுக்கின்றனர். அந்தப் பணத்தை பெற உதவி செய் வதாக கூறி சிக்க வைக்கின்றனர்.

பென்ஷனர் பாதிப்பு

பின்னர், அவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லி அவர்களின் வங்கிக்கணக்கு பண இருப்பு விவரம் உள்ளிட்ட முக்கிய தகவல் களை அவர்களிடம் இருந்து பெற்று விடுகின்றனர். அவர்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி, அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.

மோசடிக்காரர்கள், முக்கிய தகவல்களை பாதிக்கபட்டவர்களிடம் வாட்ஸ்ஆப் மூலம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப சொல்லி கேட்டு பெறுகின்றனர், அதன் மூலம் எளிதாக பணம் தொடர்பான தக வல்களை பெற்று மோசடி செய்கின்றனர். குறிப்பாக ஓய்வூதியதாரா்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இது அவா்களுக்க பொருளாதார பாதிப்பு மட்டும் இல்லை மன ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தகிறது.

  • அரசு அலுவலகத்திலிருந்து அழைப்பதாக கூறும் எந்தவொரு நபரின் அடையாளத்தையும் முதலில் சரிபார்க்க வேண்டும்
  • தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை செல்போன் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால் தவிர்த்து விடுங்கள்.
  • தனிப்பட்ட தகவல்கள், நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் செல்போனில் அளிக்க வேண்டாம்.
  • அறியப்படாத அல்லது அன்னியர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.
  • மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல், அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

இதுபோன்ற மோசடிக்கு யாராவது ஆளாகியிருந்தால், சைபர்கிரைம் இலவச உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாராக அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.