தொடரும் Cyber Scam’s ! ஏமாறும்  அப்பாவி மக்கள் ! உஷார்… உஷார்….

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தொடரும் Cyber Scam’s ! ஏமாறும்  கிருஷ்ணகிரி மக்கள் ! –  இன்றைய காலத்தில் அனைவருமே ஸ்மார்ட்போன்களே கதி என்று உள்ளனர் , அதை பயன்படுத்தி ( Cyber Scam’s!) ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது அதிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருவது அதிகரித்துள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அந்த வகையில் யூடுயூபில் லைக் செய்தால் பணம் வரும் , எழு லட்சம் கட்டினால் இரட்டிப்பாக தருகிறோம் , உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கிஃப்ட் வந்துள்ளது , பலான படம் நீ பார்த்த அதனால் வழக்கு பதியாமல் இருக்கு பணம் கொடுக்க வேண்டும் , என கிருஷ்ணகிரி மாவட்டத்தை குறிவைத்து சமீபத்தில் தினுசு தினுசாக யோசித்து பணத்தை அபகரித்த மோசடிகளில் சில கிருஷ்ணகிரி அருகே சின்னமேலுப்பள்ளி  சேர்ந்த மிதுன். தனியார் நிறுவன ஊழியரான இவரது செல்போனுக்கு கடந்த மே மாதம் 8-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதனை எடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர், நான்  மும்பையிலிருந்து போலீஸ் பேசுவதாகவும்  `உங்களது பெயருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள  போதைப்பொருள்கள் கூரியரில் வந்துள்ளது , இது தொடர்பாக உங்கள்மீது வழக்கு பதிவுசெய்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், மொத்தம் 20 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும்” என மிரட்டல் விடுத்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து ஐ.ஜி ஆபீஸ் உட்பட இரண்டு இடங்களில் இருந்து அதிகாரிகள் பேசுவதாக மிதுனுக்கு போனில் தொடர்ந்து அழைப்பு வர பயந்துபோன மிதுன், அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்க்கு 19,90,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார், அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த  மிதுன்,  கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸில் ஜூன் 18 அன்று  புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்

ஓசூர் பாகலூர் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர்  ஆடிட்டர் சபரிநாதனின்  செல்போனுக்கு கடந்த 11.04.2024 ஆம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனவும் ,  லிங்கில் தனது  விவரங்களை சபரிநாதன் பதிவிட்டு. அவர்கள் கொடுத்த நான்கு வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக  ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளார் ஆனால் அவர்கள் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான சபரிநாதன் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ள அது சுவிட்ச் ஆப்பாகியுள்ளது  .அவர்கள் கொடுத்திருந்த links  வேலைசெய்யவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன் , ஜூன் 16 அன்று  கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார்

புகார் தெரிவிக்க...
புகார் தெரிவிக்க…

அதே பாகலூர் சாலையை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சமீபகாலமாக திருமணத்திற்கு பெண் தேட , தன் சுய விபரங்கள்   வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார் , கடந்த டிசம்பர் 26-ல் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், உங்களை  மணம் முடிக்க விருப்பமாக உள்ளது என பேச , அதை நம்பி கடந்த 15 நாள்களாக வாட்ஸ் அப்பில் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து பேசி  வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜூன் 9 ந்தேதி ஃபோனில் மருத்துவ செலவுக்கு  பணம் தேவை என மெசேஜ் வர மணம் முடிக்கவுள்ள பெண்ணுக்கு அவசரம் என நினைத்த விக்னேஷ் 5.56 லட்சம் ரூபாயை அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த வாட்ஸ்அப், சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விசாரணையில் விக்னேஷிடம் பெண் படம் அனுப்பி பெண் போல  ஃபோன் ’ஆப்’ உதவியுடன் பேசியும் சாட்டிங் செய்து ஏமாற்றியது சேலம்  சின்ன திருப்பதி சேர்ந்த தத்தாத்ரி என்ற நபர் என தெரிய  வந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒசூர்  பைரமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து பார்க்கும் இவரின்  வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஏப்ரல் 5- அன்று  பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் தரப்படும் என  கூறப்பட்டிருந்தது.
இதை நம்பி அவர் 5 லட்சத்து 60 ஆயிரத்து 150 ரூபாயை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை அந்த  எண்ணை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த அந்த பெண்  கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் தெரிவிக்க...
புகார் தெரிவிக்க…

நமக்கு தெரிந்த ஒரு மாணவனுக்கு நடந்த இரு சம்பவங்கள் , ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியை சார்ந்த அந்த கல்லூரி மாணவனுக்கு சென்னையிலிருந்து  போன் கால் வந்துள்ளது மறுமுனையில் பேசிய நபர் நான் சைபர் கிரைம் டிஜிபி பேசுறேன் உன் பெயர் , உன் ஊர்,  இதுதானே என்று கேட்க இந்த இளைஞர் ஆமா சார் என பதில் அளித்துள்ளார்.

அந்த மர்ம நபரோ நீ தினமும் பலான படம் பார்த்து வருகிறாய் வாட்சப்பில் பலான குழுவிலும் நீ இருக்கிறாய் சைபர் குற்றங்களை செய்து உள்ளீர், அதனால் கல்லாவி போலீஸ் விரைவில் கைது செய்ய போகிறது எனவே  கைது ஆகாமல் இருக்க ரூபாய் 20 ஆயிரம் உடனே  இந்த பேங்க் அக்கவுண்ட் அனுப்பிவை இல்லையென்றால் கைது நிச்சயம்.

மீடியாவில் உன் போட்டோ உடன் செய்தி வெளியாகும் , என அந்த மாணவனை மிரட்ட, பதறிப்போன அந்த இளைஞன் பணத்தை ரெடி செய்து விட்டு பணம் அனுப்பும் நேரத்தில் நம் ஞாபகம் வர அண்ணா இப்படி தான், என நம்மிடம் தகவலை சொல்ல உடனே அது மோசடி என  புரியவைத்து இனி போன் வந்தால் என்னிடம் பேச சொல்லுங்க தம்பி என்று தைரியடுத்தினோம் அந்த நம்பரை நாம் தொடர்பு கொண்டபோது அவன் எடுக்கவில்லை அதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் அந்த மாணவன்

மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது!

வழக்கறிஞர் , போலீஸ் அதிகாரி, எனக் கூறி தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள்  வருவதாக புகார் வந்துள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் மேலும் இது போன்ற மிரட்டல்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி அழைப்புகள் என தங்களுக்கு வந்தால் பயப்படாமல் அது குறித்து  1930 என்ற சைபர் கிரைம் எண்ணுக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும்  எக்காரணம் கொண்டும் பணம் செலுத்த வேண்டாம் ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிய வேண்டும். ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. பான்கார்டு’ விவரங்களை பதிவு செய்ய செல்போனுக்கு எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது.

ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்கிற இலவச எண்ணில் புகார் செய்யலாம். மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேரிலும் புகார் அளிக்கலாம். என்றார்.

மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Kmg says

    Exactly news
    Thanks for angusam

Leave A Reply

Your email address will not be published.