டெல்லி ஆன்லைன் மோசடி ஆசாமியை தட்டித்தூக்கிய தேனி சைபர்கிரைம் போலீசார் !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆன்லைன் மோசடி ! டெல்லி ஆசாமியை தட்டித்தூக்கிய தேனி சைபர்கிரைம் போலீசார்! தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரிடமிருந்து, நூதனமான முறையில் 84 இலட்சத்தை ஆட்டையப் போட்ட டெல்லியைச் சேர்ந்த மோசடிக் கும்பலை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தட்டித் தூக்கி வந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ லிங்

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த 74 வயதான பானுமதி, சென்னை IIT மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மும்பை காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகக் கூறியவர், “பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்ட் வாங்கப்பட்டிருப்பதாகவும்; அந்த சிம்- உடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் மூலம் ஆபாசப்படங்கள் பலருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகவும்; அதே எண்ணுடன் இணைக்கப்பட்ட மும்பை கனரா வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ஹவாலா பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருப்பதாவும்;

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்திருப்பதாகவும்; அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும்; ஆகவே, உங்களை டிஜிட்டல் முறையில் இப்போதே கைது செய்திருக்கிறோம்.” என்று திகிலூட்டியிருக்கிறார்.

மேலும், அவரை தனி அறையில் இருக்க வைத்து வெளி நபர் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று மிரட்டி அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.84,50,000 பணத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பச் சொல்லி ஏமாற்றியிருக்கின்றனர்.

இது தொடர்பாக, தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பானுமதி அளித்த புகாரின் பேரில் தேனி எஸ் பி உத்தரவின் பேரில் தேனி சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் டெல்லி வரை சென்று மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 36 வயதான அபிஜித்சிங் என்பவரை கைது செய்திருக்கிறார்கள்.

அவனிடமிருந்து, ரூ 44,000 ரொக்கம், 5 செல்போன்கள், 1 லேப்டாப், 103 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 28 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கின்றனர். இவனோடு தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து தலைநகர் டெல்லி வரை விரட்டிப்பிடித்து சைபர் கிரைம் குற்றவாளியை கைது செய்திருக்கும் தேனி போலீசாரின் நடவடிக்கை பாராட்டை பெற்றிருக்கிறது.

– ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

1 Comment
  1. Siva Rathinam Vellaichmay says

    Excellent Theni Cyber crime team.
    All other cyber crime police must follow your bold step of visiting Delhi and nabbung the culprits
    Delhi is not in pakistan, must go grab the culprits. Most of the cyber crime police are lazy, mentally not prepared to plunge and take such challenges. Well done Theni cyber pilice team

Leave A Reply

Your email address will not be published.