ஆன்லைன் மூலம் முதியவர் பறிகொடுத்த ₹19 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்பு
திருவாரூர் அருகே முதியவரிடம் ஆன்லைன் மூலம் ஏமாற்றிய தொகை ₹1 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்டு அவரது வங்கி கணக்கில் வரவுவைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா ஆணைகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுவாமிநாதன் (82) இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் சுவாமிநாதன் பர்னிச்சருக்கான மூலப் பொருட்கள் வாங்க ஆன்லைன் மூலம் தேடியுள்ளார். அப்போது அதே ஆன்லைன் மூலம் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர்.
கானடா நாட்டிற்கு மூலிகை எண்ணெய் விற்பனை செய்வதற்கு இந்திய விற்பனை பிரதிநிதி தேவை என மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளார். இதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து கடந்த 2020 ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மர்மந பர்தனது வங்கி கணக்கு மூலம் ரூ 21 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.
அதன்பின்னர் தெரிவித்தவாறு விற்பனை பிரதிநிதி கிடைக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டது. இதுகுறித்து சுவாமிநாதன், திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் மர்மநபரின் செல்போன் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவருடைய பெயர் சோனாமிஸ்ரா என்று தெரியவந்தது. மேலும் முதியவர் சுவாமிநாதனிடம் பெற்ற தொகையினை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வங்கி கணக்கில் கைமாற்றி இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மர்ம நபர்கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து ரூ.19 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அந்த பணத்தை முதியவர் சுவாமிநாதன் வங்கி கணக் கில் வரவுவைத்தனர். பணத்தை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலிசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டினார்.