அங்குசம் சேனலில் இணைய

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் அறிவிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிஷன் வத்சல்யா திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (1 பணியிடம்) தொகுப்பூதியம் ரூ.13,240/- ( மாதத்திற்கு)

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

  • பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டயக் கல்வி (டிப்ளமோ) பெற்றிருக்க வேண்டும். (10th + 12th)
  • அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி இயக்கும் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • 12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma.
  • Certificate in Computers.
  • Weightage for Work experience candidate.

01.07.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

2) சுயசான்றொப்பமிட்ட கல்வி மற்றும் கணினி கல்வி சான்றிதழ்களின் நகல்.

3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள். உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமான ஒருவருட ஒப்பந்த அடிப்படையிலானது.

மேற்கண்ட பதவிக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 05.08.2025 முதல் 19.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1. முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி 620 001 என்ற முகவரியில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம். என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப.. தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.