”டியர் ஜீவா” இயக்குநர் பிரகாஷ் பாஸ்கருடன் ஒரு ஜாலியான நேர்காணல் !
சமூக வலைத் தளங்களில் சத்தமில்லாமல் பிரபலமாகி வருகிறது “டியர்ஜீவா” திரைப்படத்தின் போஸ்டரும், டிரைலரும். போஸ்டர் வெளிவந்த உடனே ஐ..நம்ம டி.எஸ்.கே., என்று மனதிற்குள் மகிழ்ச்சி உருவானது. காரணம், சின்னத்திரையில் பலகுரலில் மிமிக்கிரி செய்து மக்களை நல்ல எண்டர்டைன்மெண்ட் செய்வார். அதேபோல், இந்தப் படத்திலும் ஏதேனும் எண்டர்டைன்மெண்ட் செய்வார் என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ட்ரைலர் வெளியானதும், மென்மையான அழகான இன்னொரு காதல் திரைப்படம் என்று புரிந்து கொண்டோம். “காதலா..காதலா…”, “பொன்வானம்” ஆகிய பாடல்கள் வெளிவந்ததும், இந்த படத்திற்கான ஹைப் இன்னும் அதிகமானது. யாரு இந்த டீம் புதுசா இருக்கே? என்று யோசித்து “டியர் ஜீவா” திரைப்படத்தின் இயக்குனர் பிரகாஷ் பாஸ்கரிடத்தில் கலந்துரையாடினோம்.
“டியர்ஜீவா” பற்றி டியர் பிரகாஷ் பாஸ்கர் என்ன சொல்கிறார்?
தயாரிப்பாளர்கள் உமர்முக்தார் மற்றும் சதிஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் “டியர்ஜீவா”. முதலில் தயாரிப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எங்களுக்கு இந்த படத்தை முடித்து கொடுத்திருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம். இந்தப் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம்.
காதலர்களுக்கு ரொம்ப பிடிக்கும். டியர் ஜீவா படம் ஒரு ஃபீல்குட் ரொமாண்டிக் படம். நல்லா செமயா லவ் பண்ணி, கல்யாணம் பண்ண கணவன் – மனைவிக்குள் ஈகோ இருந்தால் என்ன ஆகும் என்று சொல்லும் சிம்பிள் லவ் ஸ்டோரி. இதை முடிந்தவரை எமோஷன் டச்சிங்லஸ் கிரீன் பிலே பண்ணிருக்கேன். படம் நல்லா வந்திருக்கு. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
ட்ரைலரை பார்த்ததும் பலரும் இது “ராஜாராணி” படம்போல் உள்ளது என்கின்றார்களே? அந்த படத்தின் சாயல் இதில் இருக்கிறதா?
நானும் இதை கேள்விப்பட்டேன். எனக்கு இயக்குனர் அட்லியை மிகவும் பிடிக்கும். அவர் எடுக்கும் மென்மையான காதல் காட்சிகள், அருமையாக இருக்கும். ஆனால், அதற்கும் டியர் ஜீவா விற்கும் சம்மந்தம் இல்லை. “ராஜாராணி” படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் டியர்ஜீவா என்று சொல்வதை நான் மறுக்கின்றேன். ட்ரைலரில் நாங்கள் முடிந்தவரை எமோஷன்சை அதிகமாக சொல்ல நினைத்ததால் ஆடியன்ஸுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.
இப்படத்தின் இசை மிகவும் நன்றாக இருக்கின்றதே .. யார் மியூசிக் டைரக்டர்? அவரை பற்றி சொல்லுங்க …
நிச்சயமா சொல்லியே ஆகணும். இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டர், ரஷாந்த் அர்விந். இவரு வேறு யாருமில்லை, மறைந்த இசை மாமேதை சி.ஆர்.சுப்பராமனோட பேரன். ஏற்கெனவே நான் எடுத்த குறும்படங்கள், வெப் சீரிசு க்கு ரஷாந்த்தான் மியூசிக். சோ.. அப்படியே நண்பர்களாகிட்டோம். கதை எழுதும்போதே ஸ்கிரிப்ட்டில் ரஷாந்த் பெயரைதான் முதலில் எழுதுவேன்.
ஷூட்டிங் போகும்போதே சரியாக அணைத்து பாடல்களையும் எனக்கு கொடுத்து விடுவார். பாலிவுட் இசையமைப்பாளரான ஹிமேஷ் ரேஷ்மியா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப் போன்றே இன்னொரு திறமைமிக்கவர்தான் எங்கள் படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்விந் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை.
ரஷாந்த் எப்போதுமே எனக்கு முதல் சாய்ஸ். என்று தன் படத்திற்கு இசையமைத்த நண்பன் ரஷாந்த் அர்விந் பற்றி மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட பிரகாஷ் பாஸ்கரிடத்தில்,
இந்தப் படத்திற்கு டி.எஸ்.கே. ஏன் தேவைப்பட்டார் ?
என்ற கேள்வியை முன்வைத்ததும், மெல்லிய சிரிப்போடு, 15 வருடங்களாக நானும் டி.எஸ்.கே-வும் நண்பர்களாக பயணித்து வருகின்றோம். நாங்கள் இருவரும் இணைந்து பல குறும்படங்கள், மியூசிக் ஆல்பம் சாங் ஆகியவைகளில் பணியாற்றியுள்ளோம். நான் இதுவரை டி.எஸ்.கே-வை காமெடியனாகவோ, மிமிக்ரி ஆர்டிஸ்டாகவோ நான் பார்த்ததே இல்லை.
அவர் பக்கா ஹீரோ மெட்டிரியல். “டியர்ஜீவா” கதையை நான் முடித்தவுடன். எனக்கு ஒரு நெஸ்ட்டோர் பாய் லுக்கில் உள்ள ஒரு ஹீரோ தேவைப்பட்டார். அப்ப யோசிக்கும் போது, டக்குனு என் மைண்டுக்குள் மீண்டும் டி.எஸ்.கே வந்தார். கதையை சொன்னேன். உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படித்தான் இந்தப் படத்தில் டி.எஸ்.கே வந்தார்.

இதுவரை பார்க்காத ஒரு டி.எஸ்.கே-வை இந்த படத்தில் பார்ப்பீர்கள். அதாவது, காமெடி, மிமிக்ரி இது எதுவுமே இல்லாமல். ஒரு கதைக்கு தேவையான எதார்த்த நடிகராக டி.எஸ்.கே-வை நீங்கள் பார்ப்பீர்கள்.
ஹீரோயின் பற்றியும் இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் பற்றியும் சொல்லுங்க …
இந்தப் படத்தில் ஹீரோயினாக தீப்ஷிகா நடித்துள்ளார். அவர் பக்கா தமிழ் பொண்ணு. திருச்சிதான் சொந்த ஊர். அவருக்கு இதுதான் முதல் படமாக இருந்தாலும்,நன்றாக நடித்துள்ளார். கதைக்கு நன்றாகப் பொருந்தியுள்ளார். தவிர, கே.பி.ஒய்., யோகி, லொள்ளுசபா உதயா, பிரியதர்ஷினி, மனிஷாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏன் இரண்டு சினிமாட்டோகிராபர்?
அரவிந்த் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும்தான் இந்த படத்தின் சினிமாட்டோகிராபர்ஸ். இருவரும் எனக்கு நல்ல நண்பர்களாக இருப்பதால், இந்த படத்துக்கு இரண்டு சினிமாட்டோகிராபர்ஸ் என்பது தானாகவே அமைந்தது. கதைக்குத் தேவையான பிரேம்ஸ்சை இருவரும் சேர்ந்து நன்றாக கொடுத்துள்ளனர்.
பாடல் வரிகளை இயக்குனர்களே எழுதுவதால், பாடல் ஆசிரியர்களே தேவைப்படாமல் போகிற சூழல் உருவாகிறது, என்கின்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இப்படத்தில் நீங்கள் தான் பாடல் வரிகளை எழுதி உள்ளீர்கள்?
ஹாஹா… (என்று சிரித்துக் கொண்டே) 2021 இல் வெளியான “ஊமை செந்நாய்” என்னும் படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கிறேன். ஆக, நான் முதலில் பாடலாசிரியராகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனேன். பின்பு தான் நான் இயக்குனர். மேலும், இப்போது அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்கூட, தாங்கள் பணியாற்றும் படத்தில், பாடல் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.
ஆகையால், ஒரு கதைக்கு தேவையான நல்ல பாடல் வரிகள், யாரிடம் இருந்து வந்தாலும், அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயத்தில், எல்லா பாடலும் அப்படி நடந்துவிடாது. இன்றும் பெரும்பாலான பாடல்கள், பாடலாசிரியர்களை கொண்டே இயற்றி வருகிறார்கள்.
எப்போது பெரிய ஹீரோவுக்கான படம் பண்ணுவீங்க? அடுத்து என்ன?
நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணாவுடன் நான் எப்போது பேசினாலும், “பெரிய விஷயத்துக்காக மட்டும் வெயிட் பண்ணாதீங்க… சின்ன சின்ன விஷயங்களை பண்ணிகிட்டே இருங்க, அது உங்களுக்கு பெரிய விஷயத்தை கொண்டு வந்து கொடுக்கும்னு” அடிக்கடி சொல்லுவாரு.. அது எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதுவரை, அவரோட வார்த்தைகள் மட்டுமே, எனக்கு சினிமாவில் இருக்க நம்பிக்கை கொடுக்குது. அதனால இப்போது இந்த சின்ன படத்தை எடுத்திருக்கேன். இந்த படம் நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். தாமதம் ஏன்?
சிறு பட்ஜெட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் தாமதம்தான். அக்டோபர் இறுதிக்குள் படம் வெளியாகும்.
— ரா.ரெங்கராஜன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.