அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இலக்கியத்தின் அதிகாரத்தை கலைக்கும் முயற்சி !

திருச்சியில் அடகு நகையை விற்க

திராவிட வாசிப்பு என்பது தமிழ் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு, சமூக நீதி, ஆரிய – திராவிட பிரிவு, சாதி எதிர்ப்பு போன்ற கோணங்களில் அணுகும் ஒரு விமர்சன முறை. இது பெரியார் இ.வெ.ராமசாமி தொடங்கிய திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் உருவானது. இது தமிழர்களின் அடையாளத்தை வட இந்திய ஆரிய கலாச்சாரத்திலிருந்து வேறுபடுத்தி, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் வரலாற்றை மறுவாசிப்பு செய்யும்.

திராவிட வாசிப்பு, இலக்கியப் படைப்புகளை வெறும் அழகியல் அல்லது உணர்ச்சி அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அவற்றில் உள்ள சமூக அநீதிகள், அதிகார அமைப்புகள், பாலின பாகுபாடுகள் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, ராமாயணம் போன்ற இதிகாசங்களை திராவிட வாசிப்பில் ராவணனை திராவிட ஹீரோவாகவும், ராமரை ஆரிய ஆக்கிரமிப்பாளராகவும் பார்க்கலாம். இது “திராவிட வாசிப்பு” என்ற மின்னிதழ்களில் விவாதிக்கப்படும் போக்கு, அறிவு சார் சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நகுலன்திராவிட இயக்க இலக்கிய விமர்சனம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தை பெரிதும் தீர்மானித்தது. இது தேசியம், காந்தியம் போன்ற இயக்கங்களுடன் போட்டியிட்டு, தமிழ் இலக்கியத்தை சமூக மாற்றத்தின் கருவியாக மாற்றியது திராவிட வாசிப்பு. இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அது சமூகத்தின் அடையாளத்தை எவ்வாறு உருவாக்குகிறது? அல்லது அழிக்கிறது? என்பதை ஆராய்கிறது. இது தமிழ் இலக்கியத்தின் பழங்கால நூல்களான சங்க இலக்கியங்களைக்கூட திராவிட அடையாளத்துடன் இணைத்து வாசிக்கும். இந்த வாசிப்பு முறை, இலக்கியத்தில் உள்ள மதம், சாதி, பாலினம் சார்ந்த ஆதிக்கங்களை சவால் செய்கிறது, மேலும் தமிழர்களின் சுயமரியாதையை வலியுறுத்துகிறது.

நகுலன் (டி.கே. துரைசாமி, 1921-2007) தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர், அவரது கவிதைகள் அப்சர்ட் (அபத்தம்), இருத்தலியல் (existential) தன்மை கொண்டவை. அவரது படைப்புகள் வெறுமை, சலிப்பு, அடையாள இழப்பு போன்ற தீம்களை ஆராய்கின்றன. அவரது பிரபலமான கவிதை ‘ராமச்சந்திரனா’ மிகக் குறுகியது:

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“ராமச்சந்திரனா என்று கேட்டேன். / ராமச்சந்திரன் தான் என்றார். / எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை. / அவரும் சொல்லவில்லை.”

இந்த கவிதை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண உரையாடலை அபத்தமாக சித்தரிக்கிறது – அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சி தோல்வியடைகிறது. ஆனால், திராவிட வாசிப்பு மூலம் இதை அர்த்தப்படுத்தும்போது, இது ஆழமான சமூக – கலாச்சார விமர்சனமாக மாறுகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

முதலாவதாக, ‘ராமச்சந்திரன்’ என்ற பெயர் ராமரை (ராமச்சந்திரன்) நினைவூட்டுகிறது. திராவிட இயக்கத்தில், ராமாயணம் ஆரியர்களின் பிரச்சார நூலாகக் கருதப்படுகிறது. அதில் ராமர் ஆரிய ஹீரோவாகவும், ராவணன் திராவிட அடையாளத்தின் பிரதிநிதியாகவும் பார்க்கப்படுகிறார். பெரியார் ராமாயணத்தை எரித்து, அதை சாதி – ஆதிக்கத்தின் சின்னமாகக் கண்டார். இந்தக் கவிதையில், ‘ராமச்சந்திரனா?’ என்ற கேள்வி ராமரின் அடையாளத்தை சவால் செய்கிறது – அவர் யார்? எந்த ராமச்சந்திரன்? இது திராவிட வாசிப்பில், ராமரின் ‘ஆரிய’ அடையாளத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் உள்ளது. கவிதையில் எந்த விளக்கமும் இல்லாதது, ராமாயணத்தின் ‘உண்மை’ என்று கூறப்படும் கதையின் அபத்தத்தை வெளிப்படுத்துகிறது – அது ஒரு கட்டுக்கதை, அடையாளம் இல்லாதது.

பேராசிரியர் முஜீப் ரகுமான்
பேராசிரியர் முஜீப் ரகுமான்

இரண்டாவதாக, கவிதையின் அப்சர்ட் தன்மை திராவிட பகுத்தறிவை எதிரொலிக்கிறது. நகுலனின் கவிதைகள் மாயாவாதம், வாழ்தல் – மறைதல் போன்ற தத்துவங்களை . ஆனால் திராவிட வாசிப்பில் இது சமூக அடையாள இழப்பை சுட்டிக்காட்டுகிறது. தமிழர்கள் தங்கள் திராவிட அடையாளத்தை இழந்து, ஆரிய கலாச்சாரத்தில் உருகிவிட்டனரா? ‘எந்த ராமச்சந்திரன்’ என்று கேட்காமல் விடுவது, சமூகத்தில் உள்ள அடிமைத்தனத்தை – கேள்வி கேட்காத போக்கை – விமர்சிக்கிறது. இது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடையது: அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வது சமூக அநீதியை தொடரச் செய்கிறது.

மூன்றாவதாக, கவிதையின் குறுகிய, உதிரும் வரிகள் நகுலனின் பாணி. ஆனால், திராவிட வாசிப்பில் இது இலக்கியத்தின் அதிகாரத்தை கலைக்கும் முயற்சியாகத் தோன்றுகிறது. பாரம்பரிய இலக்கியம் (ராமாயணம் போன்றவை) நீண்ட, விவரணை நிறைந்தவை; இங்கு எல்லாம் வெறுமை. இது திராவிட இயக்கத்தின் எளிமை, பகுத்தறிவு கொண்ட இலக்கியத்தை வலியுறுத்துகிறது.

எனவே, திராவிட வாசிப்பு மூலம் ‘ராமச்சந்திரனா’ கவிதை ஒரு சமூக விமர்சனமாக மாறுகிறது – ஆரிய அடையாளத்தின் அபத்தத்தை, தமிழர்களின் அடையாள இழப்பை வெளிப்படுத்துகிறது. இது நகுலனின் இருத்தலியல் தன்மையை தாண்டி, சமூக மாற்றத்தை தூண்டும் கருவியாகிறது. திராவிட வாசிப்பு இலக்கியத்தை இவ்வாறு மறுவடிவம் செய்து, தமிழ் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது.

 —    பேராசிரியர் முஜீப் ரகுமான்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.