நடிகர்கள் பட்டாளத்தை களம் இறக்கிய தனுஷ்!–‘ நி.எ.மே.கோ.’ டீடெயில்ஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தனுஷ்  எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது படமாக பிப்ரவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து 11-ஆம் தேதி  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது ‌. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலைஇயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.வுண்டர்பார் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் வரவேற்று பேசினார். “தனுஷின் ‘துள்ளுவதோ இளமைக்கு எப்படி ஆதரவளித் தீர்களோ, அதே போல இந்த இளம் நடிகர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும். சிறப்பான பின்னணி இசையை தந்து இந்த படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ்‌.தனுஷின் நட்பிற்காக வந்து சிறப்பித்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி”.

எஸ்.ஜே.சூர்யா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது.  அதனால் இப்ப தனுஷ்   நடிகர் நடிகைகள் பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”.

ராஜ்குமார் பெரியசாமி,

“தனுஷ்  அடுத்தடுத்த படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என்று பரபரப்பாக இருப்பதனால் ஒரு மகா கலைஞனாக விளங்குகிறார். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்”.

தமிழரசன் பச்சமுத்து

“தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார். அதேபோல இந்தப் படமும்  பேசப்படக்கூடிய மற்றும் ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும் என கூறினார். அவர் கூறியபடி அனைத்தும் நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்”

 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.அருண் விஜய் வாழ்த்தி

“சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன்”..

நடிகை சரண்யா பொன்வண்ணன் 

“தனுஷ்  என்னை அவரது அம்மாகவே நினைப்பவர். படத்தில் நடிக்கும் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். எனக்கு இந்தப்படமும்   படக்குழுவும் சிறப்பாக அமைந்தது”.

ஜி .வி பிரகாஷ் குமார்

“இளமையான கதையம்சம் கொண்ட படம் என தனுஷ் கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது”.

 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.நிகழ்ச்சியில் பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி, படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோரும்படத்தில்  பணியாற்றிய அனுபவத்தையும்,  மிகப்பெரிய வாய்ப்பளித்த தனுஷுக்கும் நன்றி தெரிவித்தனர்..

நடிகர்கள்:

பவிஷ் நாராயண்,

அனிகா சுரேந்திரன்,

மேத்யூ தாமஸ்,

பிரியா  வாரியர்,

வெங்கடேஷ் மேனன்,

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ரம்யா ரங்கநாதன்,

சித்தார்த்தா ஷங்கர்,

ராபியா கதூன்,

சரத்குமார்,

சரண்யாபொன்வண்ணன்,

ஆடுகளம் நரேன்,

உதய் மகேஷ்,

ஶ்ரீதேவி.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எழுத்து மற்றும் இயக்கம்: தனுஷ்

தயாரிப்பு : கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா

தயாரிப்பு நிறுவனம் : வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

இசை : GV பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ

படத்தொகுப்பு : பிரசன்னா

கலை இயக்கம் : ஜாக்கி

நடனம் : பாபா பாஸ்கர், மொயின், சுரேன் .ஆர் & பிரசாந்த்

ஆடை வடிவமைப்பு : காவ்யா ஶ்ரீராம்

ஆடைகள் : நாகு,

தயாரிப்பு நிர்வாகி :      டி. ரமேஷ் குச்சிராயர்

நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன்

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத் &  பாரஸ் ரியாஸ்

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.