தனுஷின் ‘குபேரா’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
தனுஷ்+ டைரக்டர் சேகர் கம்முலா+ மியூசிக் டைரக்டர் டிஎஸ்பி காம்பினேஷனில் ‘குபேரா’ வின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “போய் வா நண்பா”இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
அற்புதமான மனித உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள ‘குபேரா’ உலகம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP & அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட்டாலும் இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது ‘குபேரா’.
— மதுரை மாறன்.