கை, கால்களை அமுக்கி விடும் மாணவா்கள் ! வற்புறுத்தும் தலைமை ஆசிரியா் !
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கலைவாணி என்பவர். தினமும் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக் கொண்டு மாணவிகளை கை, கால்களை அழுத்தி விட வற்புறுத்துவார் என கூறப்படுகிறது. இதனால் சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர். இதனிடையே இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
— மு. குபேரன்