கோவில்பட்டி – இடிந்தும் விழும் நிலையில் வீடு – ஆட்டோவில் வாழ்க்கை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் மாற்றுத்திறனாளி அட்டை, குடும்ப அட்டை, ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமம் கிழக்கு தெருவினைச் சேர்ந்தவர் கடல்பாண்டி(38). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் குடிநீர் நிறுவனத்தில் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடல்பாண்டி 5ம் வகுப்பு படித்து வரும் தனது 10வயது மகனுடன் வசித்து வருகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இந்த சூழ்நிலையில் எனது மனைவி நிர்மலா மற்றும் எனது பெண் குழந்தையை அரசு மருத்துவர் ஒருவர் (குருசாமி) கடத்தி எங்கோ மறைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் 3 ஆண்டுகளாக மனைவி, பெண் குழந்தை காணமால் பரிதவிக்கும் நிலையில்.

ஆட்டோவில் வாழ்க்கை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி
ஆட்டோவில் வாழ்க்கை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சமீபத்தில் கோவில்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீடு பலத்த சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. அதனால் தான் குடிநீர் விநியோகம் செய்து வரும் ஆட்டோவில் தான் பல நேரம் தனது மகனுடன் வசிக்கும் நிலையில் இருப்பதாகவும், தனது வீடு சேதமடைந்தது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்தால் கடல்பாண்டி, தனது மாற்றுத்திறனாளி அட்டை, தனது குடும்ப அட்டை, அவர் மற்றும் அவரது மகன் ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். மேலும், அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இனி தற்கொலை தான் முடிவு என மனவேதனையுடன் கூறும் மாற்றுத்திறனாளி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

8 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பதால் இனி அரசு வழங்கிய எதுவும் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவருடைய கோரிக்கை மனு குறித்து பரீசிலனை செய்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அவருடைய மனைவி, மகள் தொடர்பாக கடல் பாண்டி கொடுத்த புகார் தொடர்பாக ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், இனி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மனைவி, மகளின் நிலைமை என்னவென்று தெரியமால் ஒரு புறம், எந்நேரமும் இடிந்து விழும் வீடு மறுபுறம், தனது 10 வயது மகனை வைத்து கொண்டு ஆட்டோவில் குடும்பம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளி கடல்பாண்டி தன்னுடைய வீட்டினை சரி செய்து தர வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்  என்று தொடர்ந்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு வழங்கி வந்துள்ளார். இதுவரை இவர் வைத்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதால் கடல்பாண்டியின் துயர் துடைக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை.

பேட்டி : கடல்பாண்டி

 

   — மணிபாரதி.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.