புரோக்கர்கள் பிடியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புரோக்கர்கள் பிடியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ! – மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகம் மதுரையடுத்த ஆனையூரில் தனி அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 2000 சதுர அடிக்கும் அதிகமான அளவை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் மற்றும் 10000 சதுர அடிக்கும் மேலே உள்ள நிலப்பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பயன்பாட்டிற்கான கட்டிட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பணிகளை மதுரை நகர் ஊரமைப்பு இயக்ககம் செய்து வருகிறது. குறிப்பாக, குறிப்பாக கட்டிட பிரிவு அனுமதி,மனையடி பிரிவு பிரித்தல் அனுமதி, நில உபயோக மாற்றம் உள்ளிட்ட மிக முக்கியமான அனுமதிகளை வழங்கி வருகிறது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு உதவி இயக்குனர் தலைமையில், சூப்பர்வைசர், பிளானிங் அசிஸ்டன்ட், சர்வேயர், கிளார்க் என முப்பதுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இங்கே பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்டோர், தங்களது உயர் அதிகாரிகளை சரிகட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக சொல்கிறார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இதுபோன்ற சேவைகளைப் பெற்றுத்தருவதற்கென்றே, சில தனியார் சேவை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு விண்ணப்பிப்பதற்கு தேவையான கட்டிட கட்டுமானம் தொடர்பான பல்வேறு சான்றுகளை வழங்குவதற்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களும் அலுவலகம் அமைத்து சேவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு வகையான அனுமதிக்காக மதுரை நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உரியமுறையில் சேவையை வழங்குவதில்லை என்கிறார்கள். அது இல்லை, இது சரியில்லை என்று சம்பந்தமே இல்லாத பல்வேறு காரணங்களைக்கூறி, விண்ணப்பித்தவர்களை அலைக்கழிக்க வைப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், அவ்வாறு விண்ணப்பித்தவர்களிடம் அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தங்களது தனிப்பட்ட எண்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பி விட்டு பிறகு பேசுங்கள் என்பதாக சொல்கிறார்களாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

விண்ணப்பித்தவர்களும் ஓரிரு நாள் கழித்து அவர்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு இன்னின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். நானே அலுவலகத்தில் சம்பந்தபட்டவர்களை சரிகட்டி உங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெற்றுத்தருகிறேன். அதற்கு இவ்வளவு செலவாகும் என்று நேரடியாக பேரம் பேசுகின்றனராம். வெளியில் புரோக்கர்களை நம்பினால், கொடுக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றும் சேர்த்தே கொளுத்திப் போட்டுவிடுகின்றனராம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்

இதனால், அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்கள் அல்லது தனியார் சேவை நிறுவனங்களை நம்பாமல், சம்பந்தபட்ட அரசு ஊழியரிடமே சரணடைந்துவிட்டால், வேலை சுலபமாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் அவர்களிடமே பணத்தை கொட்டி அழுது தங்களுக்குத் தேவையான சான்றுகளை பெற்றுவருவதாகவும் சொல்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து, உதவி இயக்குனர் மஞ்சுவை சந்திக்க அலுவலகத்தில் மூன்று மணிநேரம் காத்திருந்தோம். ஆனாலும், அவரை சந்திக்க இயலவில்லை. பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். “நான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்றவர், இப்போது வரையில் திரும்பப் பேசவில்லை.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளையடுத்தே, தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதியைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். வருவாய்த்துறையில் பல்வேறு விதமான சான்றுகளை பெற ஆன்லைன் வழி விண்ணப்பித்தாலே போதுமானது என்றாலும்கூட, அசல் ஆவணங்களுடன் நேரில் வருமாறு விண்ணப்பித்தவர்களை அழைத்து கையூட்டு பெற்றுத்தான் வருகின்றனர் என்றக் குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வருகிறது. அதுபோல இந்தத்திட்டமும் ஆகிவிடக்கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

ஷாகுல் படங்கள்: ஆனந்தன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.