தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: லட்டு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! தீபாவளி பக்கத்துல வந்துடுச்சு நம்ம கெஸ்ட் எல்லாம் இன்வைட் பண்ணுவோம். அவங்களுக்கு வாய்க்கு ருசியா தீபாவளி திருநாள இனிப்பா செலிபெரெட் பண்ண வீட்ல ஒரு ஸ்வீட் செய்யணும் இல்ல. இன்னைக்கு நாம லட்டு தான் செய்யப் போறோம். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார அங்குசம் வார இதழில்…

கடலை மாவு 1 1/2 கப், உப்பு 1 சிட்டிகை, சர்க்கரை 2 கப், கற்கண்டு ஒரு ஸ்பூன், திராட்சை முந்திரி தேவையான அளவு, நெய் தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து பூந்தி போடும் பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கரைத்த மாவினை ஜல்லி கரண்டி ஊற்றி பூந்தியை பொறித்து எடுத்துக் கொள்ளவும். அதில், சிறிது பூந்தியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். அதன் பின் பொறித்து எடுத்த பூந்திகளை அதில் போட்டு அரைத்த பூந்தி கலவையும் அதனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் சர்க்கரை பாகிலே ஊற விடவும். அதன் பின் நெய்யில் பொறித்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உருண்டை பிடித்தால் சுவையான பூந்தி லட்டு தயார். தீப ஒளி திருநாளில் பூந்தி லட்டு சுவைத்த மகிழுங்கள்.

 

– பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.