அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த மாநகராட்சி பதவி !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று மார்ச் 2 பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் யார், துணை மேயர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு மாநகராட்சியிலும் மக்களிடம் கேள்வியாக எழுந்து வருகிறது.

HARINI JEWELLERS TRICHY

அதேநேரம் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கக்கூடிய நிலையில் கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை திமுகவிடம் கேட்டு உள்ளனர். இதையடுத்து சில மாநகராட்சி மேயர் அல்லது துணை மேயர் பதவி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இவ்வாறு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவியும் காஞ்சிபுரம் மற்றும் சேலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவியும் ஒதுக்கப்பட உள்ளதாம். மற்றொரு கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் துணை மேயர் பதவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவி, கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும்,ஆவடி மாநகராட்சி மேயர் துணை மேயர் பதவி மதிமுகவிற்கும் ஒதுக்கப்பட உள்ளதாம். இவ்வாறு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நாளை மறுநாள் மார்ச் 4ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர். அதேசமயம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பதவியை திமுகவே தனது கைவசம் வைத்துக்கொள்ள உள்ளதாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.