அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக நிர்வாகி சுட்டு கொலை!!!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கிராங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 45. இவர் முன்னாள் வனக்குழு தலைவராகவும், திமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் வீட்டிலிருந்து விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது உறவினரால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் சம்பவம் இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். மலை கிராமம் என்பதால் உயிரிழந்த சம்பவம் காலதாமதமாக தெரியவந்துள்ளது.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரிய கோவில் காவல்துறையினர் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிராங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி ஆகிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் நிலத்தகராாில்  திமுக கிளைச் செயலாளர் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.