அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர நிர்வாகி! கைது செய்யப்படுவாரா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர்  நா.ராமசாமி. இவர் கடந்த ஜூன் 24 ம் தேதி பணியில் இருந்த போது அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட  திமுக தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் , நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியாவின் கணவருமான  பாலமுருகன் தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு  வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு சென்ற வருவாய் ஆய்வாளரை  பாலமுருகன் ஜாதி பெயரை சொல்லி திட்டி அரசு பணியை செய்யவிடாமல்  தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . இது குறித்து  வருவாய் ஆய்வாளர் ராமசாமி ஜூன் 24 ம் தேதி தேனி காவல்துறையினருக்கு கொடுத்த புகார் கொடுத்துள்ளார் .

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பாலமுருகன்
பாலமுருகன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  வருவாய் ஆய்வாளர் ராமசாமியை  திமுக வை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் சமரச முயற்சியில் ஈடுபட்டும்  பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் ராமசாமியின்  துணிச்சலால்  ஜூன் 27 ம் தேதி தேனி காவல்துறையினர்  திமுக நிர்வாகி பாலமுருகன் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://www.livyashree.com/

இந்த நிலையில்  திமுக நிர்வாகி பாலமுருகனை  கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக நிர்வாகி பாலமுருகன் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி திமுக தலைமை கழகத்தால்  கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு  கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும்  திமுக கட்சி  தலைமை மூலம் மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .

அரசு ஊழியர் என்று பாராமல்  அவரது ஜாதிப் பெயரைச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன் மீது  திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்து அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும்  பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர் . மேலும் அரசு ஊழியரை ஜாதிப் பெயரைச் சொல்லி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த ஆளும் திமுக அரசை சேர்ந்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை மேற்கொண்ட தேனி காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.