அடேங்கப்பா … அசரவைத்த திமுகவின் ஐ.டி. விங் !

0

அடேங்கப்பா … அசரவைத்த திமுகவின் ஐ.டி. விங் ! சொல்லி அடித்தாற்போல, தமிழகம் மற்றும் புதுவையின் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போதிலும், முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பால் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவகாசம் மிக மிகக்குறைவாகவே இருந்தது. ஆனாலும், குறுகிய அவகாசத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது திமுக.

திமுக ஐடி விங்
திமுக ஐடி விங்

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

அதிலும் குறிப்பாக, திமுக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி (I.T. WING) யின் பங்களிப்பு பிரமிப்பூட்டுகிறது. இன்றைய கேஜட் உலகத்தில், கேடட் கம்யூனிட்டியாக பட்டுப்புழுக்களைப்போல சிறுகூட்டுக்குள் வாழ பழகிக்கொண்ட ஜீவன்களிடத்தும்கூட, அரசியல் பிரச்சாரத்தை கொண்டு செல்வதென்பது அசாத்தியமானது.

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா வழிநடத்த, ஆலோசகராக மூத்தப்பத்திரிகையாளர் கோ.வி.லெனின் உள்ளிட்டு பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்போடு இதனை சாத்தியமாக்கியிருக்கின்றனர்.

- Advertisement -

திமுக ஐடி விங்
திமுக ஐடி விங்

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட ஏறத்தாழ 68ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கான தி.மு.க பூத் கமிட்டி ஒவ்வொன்றிலும் ஐ.டி.விங் நிர்வாகி ஒருவர் இடம்பெறுவதை உத்திரவாதப்படுத்தியிருப்பதோடு, வாக்கு இயந்திரம் தொகுதிக்குள் வந்திறங்கிய நாளிலிருந்து சட்டத்துறையினருடன் இணைந்து அவற்றைக் கண்காணித்து, மாதிரி வாக்குப்பதிவுகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது வரையில் அவர்களைக் கொண்டே கண்காணித்திருக்கின்றனர்.

4 bismi svs

வழக்கமாக எதிரணியின் அவதூறான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் குழுவாக இல்லாமல், தி.மு.க கூட்டணியின் நியாயமான-வலிமையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு எதிரணியினரை நிர்ப்பந்திக்கும் வகையிலான narrative setting செய்திருக்கிறது, திமுக ஐ.டி.விங்.

தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் அவர்களது சமூக வலைத்தளப் பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்ததன் வழியே, தேர்தல் களத்திற்கான contents தோழமைக் கட்சியினருடன் இணைந்து வைரலாக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது.

திமுக ஐடி விங்
திமுக ஐடி விங்

மாவட்டக் கழகங்கள் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு தொகுதிக்குமான War Room அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டதோடு, கழகத்தின் அனைத்து அணிகளுடனும் ஐ.டி.விங் இணைந்து செயலாற்றுவதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார்கள்.

TRB ராஜா
TRB ராஜா

வாக்குப்பதிவு முடிவடைந்தபோது 68ஆயிரம் பூத்களிலும் 17சி படிவத்தைப் பெறுவதில் ஐ.டி.விங் நிர்வாகிகள் துணை நின்றதோடு, கூடவே அனைத்து பூத்களின் படிவங்களையும் டிஜிட்டலைஸ் செய்தும் முடித்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக இவையனைத்தும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத -பொறுப்புகளை எதிர்பார்க்காத முன்கள வீரர்களாக செயல்பட்ட Wing2.0வின் தன்னார்வலர்களைக் கொண்டு சாதித்திருக்கின்றனர்.

– டெல்டாக்காரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.