அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அறுபதிலும் களம் காணும் திமுக தளகர்த்தகர்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 தமிழக சட்டசபைக்கான தேர்தலில், திமுக கட்சியின் சார்பில் 164 வேட்பாளர்கள் களம் காண இருக்கிறார்கள். இந்த பட்டியலில் 60 பேர் புதுமுகங்கள்; 18 பேர் பெண்கள்; 125 பேர் பட்டதாரிகள்; 29 பேர் வழக்கறிஞர்கள்; 17 பேர் பொறியாளர்கள்; 15 பேர் மருத்துவர்கள்; 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்களையெல்லாம் தாண்டி, சுவாரஸ்யமான விசயம் ஒன்று அடங்கியிருக்கிறது. மூத்த குடிமக்கள் என்று வரையறுக்கப்படும் 65 வயதுக்கு மேலான வேட்பாளர்கள் 34 பேர் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள் என்பதுதான் அது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்தப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, 87 வயதில் களம் காணும் திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன். இவருடன் சேர்த்து 70 வயதுக்கு மேல் களம் காண்பவர்கள் 20 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
* முதுகுளத்தூர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் (78)
* ஈரோடு மேற்கு சு.முத்துசாமி (77)
* கம்பம் என்.ராமகிருஷ்ணன் (77)
* கும்பகோணம் சாக்கோட்டை ஜி. அன்பழகன் (77)
* திருமயம் எஸ்.ரகுபதி (76)
* போடி ஓ.பன்னீர்செல்வம் (75)
* திருவண்ணாமலை எவ. வேலு (75)
* அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (75)
* ராதாபுரம் எம்.அப்பாவு (75)
* திருச்சி மேற்கு கே.என்.நேரு (74)
* திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் (74)
* ஆத்தூர் ஐ.பெரியசாமி (73)
* கொளத்தூர் மு க. ஸ்டாலின் (73)
* உத்திரமேரூர் க சுந்தர் (72)
* ஆண்டிப்பட்டி ஆ.மகாராஜன் (72)
* ஒரத்தநாடு R. வைத்தியலிங்கம் (71)
* கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி (71)
* செஞ்சி கே.எஸ். மஸ்தான் (70)
* மதுரை வடக்கு G.தளபதி (70)
* சேலம் தெற்கு எம்.லோகநாதன் (70)
65 வயது முதல் 69 வயது வரையில் 14 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
* பல்லடம் க.செல்வராஜ் (69)
* குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (68)
* சேலம் வடக்கு ஆர்.ராஜேந்திரன் (67)
* ஆம்பூர் அ. செ. வில்வநாதன் (67)
* மாதவரம் எஸ்.சுதர்சனம் (67)
* சைதாப்பேட்டை மா சுப்பிரமணியம் (67)
* திட்டக்குடி (தனி ) சி.வி. கணேசன் (66)
* ஆலந்தூர் தாமோ. அன்பரசன் (66)
* மதுரவாயல் காரம்பாக்கம் கா.கணபதி (66)
* நாகர்கோயில் எஸ்.ஆஸ்டின் (66)
* எடப்பாடி சி .காசி (65)
* வேலு ப கார்த்திகேயன் (65)
* கும்மிடிப்பூண்டி டி .ஜெ.கோவிந்தராஜன் (65)
* ஒட்டன்சத்திரம் அர.சக்கரபாணி (65)

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.