திமுக செய்த பெரும் தவறு.. எடப்பாடி பழனிச்சாமி கண்டுபிடிப்பு!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திமுக செய்த பெரும் தவறு.. எடப்பாடி பழனிச்சாமி கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று 500க்கும் மேற்பட்டோர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் பங்கேற்று அதிமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ,‘ செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தமிழ் அரசின் நடவடிக்கைகளை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது’ என்று தெரிவித்தார் . ‘ஊழல் புரிந்த ஒரு அமைச்சரை, அவர் எந்த கட்சியாக இருந்தாலும் இன்றைக்கு கைது செய்யப்பட்டு சிறை கண்காணிப்பில் உள்ளார். ஆனால் இன்றைக்கும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருப்பது மிகப்பெரிய தவறு .

அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் புரிந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியை பறிக்கப்பட்ட வரலாறும் உள்ளது . ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் வருமானவரித் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை கைது எண் பெற்ற பிறகும் அவர் அமைச்சராக தொடர்வார் என்று அறிவிப்பது ஒரு மோசமான உதாரணமாக பார்க்கிறோம் . திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின், அரசியல் நாகரீகம் கருதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

அதிமுகவிற்கு தனிக் கொள்கை உள்ளது , கொள்கை அடிப்படையில்தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம், தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்  என்றார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ,’ஜனநாயகம் நாட்டில் அவரவர்கள் கருத்தை கூறுவதற்கு உரிமை உண்டு என்று கூறினார். நீட் தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக- காங்கிரஸ் கட்சிகள் தான் என்றார்.

-சோழன் தேவ்

 

மேலும் செய்திகள் படிக்க:

https://angusam.com/governor-vs-chief-minister-started-a-power-struggle/

அங்குசம் யூடியூப்

https://youtube.com/@AngusamSeithi

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.