கடைசி வரை சிங்கிள் “டீ ” தானா ! தி.மு.க. தொண்டனின் குமுறல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கடைசி வரை சிங்கிள் “டீ ” தானா ! தி.மு.க. தொண்டனின் குமுறல்

 

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நான் பிறந்ததிலேர்ந்து திமுக, யாரையாவது இல்லேனு சொல்ல சொல்லலுங்க, திருச்சி தெற்கு மாவட்டத்தில் புதிய 21 வது வார்டில் மாற்றுகட்சியிலிருந்து வந்தவன்களுக்கு வாய்ப்பளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வாழ்த்துகள்!

 

தமிழகத்தில் திமுகவின் 15வது உள் கட்டமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் ஒன்றிய, பகுதி, நகர, வட்ட செயலாளர் – நிர்வாகிகள் அறிவிப்பு அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் பொதுசெயலாளர் ஒப்புதலுடன் அங்கிகரமாக வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அடுத்து மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது
ஜனநாயக முறைப்படி தேர்தல் என்றாலும் போட்டியின்றி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் அதிருப்தியான சூழ்நிலை உருவாகிறது.

இது உள் கட்சி விவகாரம் என்றாலும், நாளை தேர்தல் முடிவுகள் எப்படியாக இருந்தாலும் வார்டு, பகுதி நிர்வாகிகள் மீதே பழி போடப்படும்.

ஆனால் உண்மையாக கட்சிக்கு பாடுபடுபவர் யார் ? கட்சிக்கு உழைத்தவர் யார்? என்பது தெரிந்தோ, தெரியாமலே பதவிகள். வழங்கப்பட்டது , பொதுவான அதிருப்தி நிலையை உருவாக்கி உள்ளது.


திருச்சி மாவட்டத்தில் பட்டியல் வெளியானதும் பதவி பெறாத கட்சியினர் வயிறு பற்றி எரிந்தது.

யாருக்கு பதவி ?
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என பேரறிஞர் அண்ணா சொன்னதை
மாற்றி புரிந்துகொண்டு செயல்படுத்தி உள்ளனர்.

வேறு கட்சியில் இருந்து வருகை தந்தவர்களை வரவேற்பது குறித்து தான் அண்ணா கருத்து தெரிவித்தார்

ஆனால் திமுகவின் ஐம்பெரும் கொள்கைகள் அறியாத இன்னும் சொல்ல போனால் கட்சிக்கு வந்து 1 வருடம், 6 மாதம் கூட ஆகாதவர்கள் வட்ட செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பெயர் மற்றும் கட்சியில் உள்ள முக்கிய பெயர்கள் கூட தெரியாத ஒருவருக்கு,

மாற்று கட்சியில் இருந்து வந்தவுடன் பதவி, டாஸ்மாக் பார் உரிமம், மிக பெரிய சாலை, பாலம் காண்ட்ரக்ட்என வழங்கப்பட்டு
விடுவதால் வழக்கம்போல் கட்சிக்கு காலம்காலமாய உழைப்பவர்கள் கட்சி கொடியை பிடித்து கொண்டு கலைஞர் வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க , அமைச்சர் வாழ்க, என கோஷமிட்டு கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு 200 ரூபாய்,பிரியாணி, கட்டிங், குவார்டர், என வாழ்க்கையை முழுவதும் வாழவேண்டியது தான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வயதான நிலையில் மூத்த உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாய் பொற்கிழி வழங்கப்படுகிறது
சரி நம் உழைப்புக்கு 10,000 ரூபாயாவது கிடைக்கும் என ஆறுதல் அடைய நினத்தாலும் அதுவும் சில வார்டுகளில் வார்டு செயலாளர் கமிஷன் டீல் பேசி
பேரம் ஒத்துபோன நபரை கட்சி மூத்த முன்னோடி என கூறி அவருக்கு வாங்கி தந்து கமிஷன் பெற்று அந்த பொற்கிழியையும் கொடுக்கவிடாமல் செய்துவிடுகின்றனர்.

கட்சி கொடியை கூட அந்த காலத்தில் வட்ட செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை தாங்களே முன்நின்று கட்சிகொடிகளை கட்டினர்.


இப்போது வட்ட செயலாளர் முதல் வட்ட அடிப்படை உறுப்பினர் கூட கட்சி கொடி கூடபிடிப்பதில்லை, கட்சி கொடிகட்ட கூட காண்ட்ராக்ட் பேசுகின்றனர்.

புதிதாய் பதவி ஏற்றவர்கள் நிலை இதுதான்.

உழைப்புக்கும், கட்சி விசுவாசத்திற்க்கும் கொடுக்கப்பட்ட பதவிகள் கட்சி அமைச்சர், நிர்வாகிகளுக்காக உழைப்பவர்களுக்கும், கார் கதவை திறந்து அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் வீட்டுக்கு பிரியாணியையும் வஞ்சிரம் மீன் கொண்டு போகிறவர்களுக்கும் பதவி என வந்துவிட்டது.

ஆக கட்சியில் கட்சி நிர்வாகிகள் திருப்தி அடையும் வரை அவர்களுக்காக மட்டும் விசுவாசம் இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும் – பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு பதவி.

மாற்று கட்சியில் சக்கையாகிவிட்டு திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் என்கிட்ட இத்தனை ஓட்டு இருக்கு நான் திமுகவுக்கு வந்தால் எனக்கு பதவி, மரியாதை தேவை என ஓட்டு டீலிங் பேசி நோட்டு பெற்று கொண்டு பதவியும் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் இவர்கள் முன்பு இருந்த கட்சியில் இவரை செல்லா காசாகத்தான் வைத்திருந்தார்கள்
அதை மறைத்து திமுகவுக்கு டீலிங் பேசி வருகிறார்கள் – பதவியும் வாங்கி விடுகின்றனர்
அமைச்சர் – MLAக்கள் கட்சி நிர்வாகிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என உத்திரவிட்டும்
டாஸ்மாக் பார் பணம் என வார்டு நிர்வாகிகளுக்கு சமமாக பிரிக்கப்பட்டு மாதம் 2000 ரூபாயாவது கிடைத்தது அதுவும் வட்ட செயலாளர் உட்பட குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு அதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது.


முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் அன்றைக்கு சொன்னதில் மிக பெரிய உண்மை உள்ளது என்பது இப்போது தான் புரிகிறது
சிங்கிள் டீ குடித்துவிட்டு இரவும்பகலும் சின்சியராய் திமுக வெற்றிக்கு பாடுபடுபவன் தான் திமுக தொண்டன் என கூறினார்.
அதன் உண்மை, கடைசிவரை திமுக தொண்டனுக்கு கிடைப்பது சிங்கிள் டீதான்
இந்த உண்மையை காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.

திமுகவின் உண்மை நிலையை உரைத்த அவருக்கு திமுக தொண்டர்கள் நன்றி சொல்லி நினைவுகூற வேண்டும்.

என்ன தான் சொன்னாலும்
வரும் பாராளுமன்ற தேர்தலில் பதவி கிடைக்காதவர்களை பூத் கமிட்டியில் சேர்த்து செலவுக்கு நாலு 500 ரூபாய் கொடுத்தால் போதும் வழக்கம்போல் கட்சி கொடிபிடித்து தேர்தல் பணி முடிந்தவுடன் காதல் படம் பரத் மாதிரி புலம்பிகொண்டே இருப்பான்.  கட்சியை மட்டும் விட்டு கொடுக்க மாட்டான். பதவி இல்லை என்பதற்காக மாற்று கட்சியில் பல கட்சியில் இருந்துவிட்டு இளிச்சவாய் தலைமை திமுக ஆளுங்கட்சி ஆனதுமே முதல் ஆளாய் மந்திரிக்கும், மாவட்டத்திற்க்கும் சால்வை அணிவித்து தலைக்கு 200 ரூபாய் கொடுத்து கூட்டி வந்த ஆட்களை தன் ஆதரவாளர் என கூறி ஏதாவது அணியில் பொறுப்பு வாங்கி
அணிக்கு உறுப்பினர்களை சேர்க்காமல் அணி சார்பில்
கூட்டம் போடாமல்
தனி ஒரு நபர் மட்டும் தலையை காட்டிவிட்டு மேலும் பதவி அல்லது காண்ட்ரக்ட் ஒப்பந்தம் என 5 வருடம் அனுபவித்துவிட்டு
அடுத்து ஆளுங்கட்சியாக யார் வருகிறார்களோ
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வேஷ்டி கரைகலர் மாற்றிகொண்டு,
அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா என கவுண்டமணி பாணியில் அரசியல் காமெடி.

 

நாயகர்களை பகுதி தொகுதி, வட்ட நிர்வாகிகளாக முடிசூட்டும் திமுக தலைமை உண்மையான கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்களா?

பதவி கிடைக்காத போது பொங்கி எழுவதும், தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் – 5000 வாங்கிகொண்டு கட்சிகாக உழைப்பதும் பழகிபோன ஒன்று பாவம் இந்த தொண்டர்களின்
நிலைகாக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

என்று முடிகிறது எம்.குமரேசன் என்கிற திமுக தொண்டனின் முகநூல் பதிவு

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.