அங்குசம் பார்வையில் ‘டி.என்.ஏ.’ 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார். தமிழ்நாடு ரிலீஸ் : ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்‌ஷன் : நெல்சன் வெங்கடேசன். நடிகர்-நடிகைகள் : அதர்வா, நிமிஷா சஜயன், மானசா செளத்ரி, பாலாஜி சக்திவேல், சேத்தன், ரித்விகா, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், ஐஸ்வர்யா ரகுபதி.  ஒளிப்பதிவு : பார்த்திபன், பின்னணி இசை : ஜிப்ரான் வைபோதா, பாடல்கள் இசை : சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிகரன், சாஹி சிவா, பிரவீன் சைவி, அனல் ஆகாஷ், எடிட்டிங் ; சாபு ஜோசப், பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & யுவராஜ்.

மானசாவுடனான லவ் பிரேக்கப் ஆனதால் சரக்கு+ கஞ்சாவிற்கு அடிமையாகிறார் ஆனந்த் [ அதர்வா] இதனால் அப்பா சேத்தன் மற்றும் குடும்பத்தாரால்  வெறுத்து ஒதுக்கப்படும் அதர்வாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் அவரது நண்பர்களான ரமேஷ்திலக் குழுவினர். ஆள் பார்க்க தெளிவாக இருந்தாலும் தனது ஆக்டிவிட்டீஸ் + பேச்சுகளால் வீட்டினரால் வேறு மாதிரியாக பார்க்கப்படுகிறார் திவ்யா [ நிமிஷா சஜயன் ]. இப்படிப்பட இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகத் தான் போகிறது. இந்த மகிழ்ச்சியின் விளைவாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறார் நிமிஷா.

Sri Kumaran Mini HAll Trichy

டி.என்.ஏதனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்து, தொப்புள் கொடியை அறுத்து சுத்தம் செய்து, முதல்கட்ட பரிசோதனை முடிந்து நிமிஷாவிடம் குழந்தையைக் கொடுத்ததும் “இது என் குழந்தை இல்ல” என குழந்தையின் ஸ்பரிசம் மூலமே சொல்லி அனைவரையும் அதிர்ச்சியாக்குறார் திவ்யா. அவரின் ஆக்டிவிட்டீஸில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என குடும்பத்தினர் அனைவருமே நம்புகின்றனர். ஆனால் ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதில் உண்மை இருக்கும் என நம்பி தனது குழந்தையைத் தேடி போலீசின் உதவியை நாடுகிறார். திவ்யா & ஆனந்தின் குழந்தையை யார் கடத்தியது? ஏன் கடத்தினார்கள்? அவர்களின் குழந்தை கிடைத்ததா? என்பதை இரண்டரை மணி நேரம் குறுநாவல் படித்த ஃபீலிங்கை ஏற்படுத்தியுள்ளார்  இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

ஆரம்பத்தில் சரக்கும் கஞ்சாவுமாக தறிகெட்டுத் திரியும் அதர்வா, நிமிஷாவை பெண் பார்க்கப் போய், சற்றே மனம் திருந்துவது, தாலிகட்டும் நேரத்தில் நிமிஷாவுக்கு பைத்தியம் என நண்பர்கள் சொன்னதும் “இவதான் என் மனைவி, நாங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்வோம்” என நிமிஷாவின் தோள் தொட்டு அரவணைப்பது, குழந்தையைக் கண்டு பிடிக்க போராடுவது என எல்லா ஏரியாவிலும் அதர்வா அதகளம் பண்ணியுள்ளார். இவருக்கு இந்த ‘டி.என்.ஏ.’ பெஸ்ட் ரிசல்ட் தந்துருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

டி.என்.ஏஅதே போல் நிமிஷா சஜயன்னா சும்மாவா..? தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் “நான் நல்லாத்தானே பேசுறேன்” என சரமாரியாக பொரிவதாகட்டும், அதர்வாவை கதவுக்குப் பின்னால் பார்த்து பூரிப்பதாகட்டும், “என் குழந்தை எனக்குத் தெரியாதா? நான் பொய் சொல்றனா?” என கோபாவேசமாக பாய்வதிலாகட்டும் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் நிமிஷா. நிமிஷாவின் அம்மாவாக விஜி சந்திரசேகர், அதர்வாவின் அப்பாவாக சேத்தன் நடித்திருந்தாலும் படம் முழுக்க மனதில் நிற்பவர் போலீசாக வரும் பாலாஜி சக்திவேல் தான். ஜெயிலுக்குப் போய் ரவுடி ஒருவனிடம் உதவி கேட்பது, ஆஸ்பத்திரி நர்ஸுகளிடம் விசாரிக்கும் தொனி, எப்போதுமே அதர்வாவுக்கு ஆதரவாக நிற்பது என பல சீன்களில் சிக்சர் அடிக்கிறார் பாலாஜி சக்திவேல். க்ரைம் ரெக்கார்ட் ஆபீசில் அவர் பேசுவது தான் கொஞ்சம் புரியவில்லை. நிமிஷாவிடம் விளக்கம் சொல்லும் அந்த பெண் மருத்துவரும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் பெரும்பலம் என்றால், அது ஜிப்ரானின் பின்னணி இசை தான். ஸ்கிரீனில் க்ரைம் ஏரியா வரும் போது அதிரவைக்கிறார். க்ளைமாக்ஸில் கோவிலில் தவில், நாதஸ்வரம், கொம்பு போன்ற வாத்தியக்கருவிகளின் துணையுடன் டெம்போ ஏற்றுகிறார். ஜிப்ரானின் பின்னணி இசைக்காகவே இரண்டாவது தடவை டி.என்.ஏ.வைப் பார்க்கலாம்.

டி.என்.ஏஹீரோவுக்கு ஓப்பனிங் பில்டப் சீனோ, சாங்கோ இல்லாமல் வெகு இயல்பாக படத்தை ஆரம்பித்து, இடைவேளை வரை சீரான வேகத்தில் கதையைக் கொண்டு போய், அதன்பிறகு திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேரும் போது, பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். என்ன ஒண்ணு தலைச்சன் ஆண் பிள்ளை நரபலி, குறிப்பிட்ட லக்கனத்தில் பிறந்த குழந்தைன்னு கொஞ்சம் சுத்தலில்விட்டது தான் டயர்டாகிப் போச்சு.

மத்தபடி இந்த ‘டி.என்.ஏ.’ டெஸ்ட் ரிசல்ட், பெஸ்ட் ரிசல்ட்.

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.