ஜல்லிக்கட்டு காளைக்கு ஜாதி வண்ணம் பூச வேண்டாம்- அனைத்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
ஜல்லிக்கட்டு காளைக்கு ஜாதி வண்ணம் பூச வேண்டாம்- அனைத்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம்அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில், பல ஆண்டுகளாக தென்கால் விவசாய பாசன சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஜாதி ரீதியாக அமைப்பை உருவாக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முயற்சி செய்து ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற 2023 ஜல்லிக்கட்டு போட்டியை ஜாதி ரீதியாக தனி அமைப்பினர் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும்,அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என அவனியாபுரம் பகுதி விவசாயிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்