உயர்நீதிமன்ற தீர்ப்பை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்! பெற்றோர்கள் கண்ணீர்!
2011 ஆண்டு சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி, இரட்டை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டணை, இரட்டை ஆயுள் தண்டணை 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்ட கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கட்டவெள்ளை (எ) திவாகரன், உச்சநீதி மன்றம் கடந்த 16.7.2025ல் விடுதலை செய்யப்பட்டதை வழக்கில் குற்றவாளிக்கு தமிழக அரசும், சிபிசிஐ டி காவல்துறை, சட்டத்துறை விரைவாக மேல்முறையீடு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பையே உறுதிப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி, கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டு பேர் கடந்த 2011ம் ஆண்டு தேனி மாவட்டம் சுருளி அருவி வனப்பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தட்டவெள்ளை (எ) திவாகரன் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கானது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு முன்னாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் சிபிசிஐடி குற்றப்புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த 2019ம் ஆண்டு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முதல் முறையாக சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் கொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தது.
இறந்த அந்த இரண்டு கல்லூரி மாணவ, மாணவி, உயிர்களுக்கு நீதி கிடைத்தாக பெற்றோர்கள் எண்ணினர்.

சில காலம் கழித்து உயர்நீதிமன்றத்தில் கொலை குற்றவாளி மேல் முறையீடு செய்தபோதும் மாண்புமிகு தமிழ்நாடு அரசும், சட்டத்துறையும், காவல்துறையும் கண்ணியமான முறையில் வழக்காடி அந்த கொலை குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்த தூக்குத் தண்டனையும், இதர தண்டனைகளையும் உறுதி செய்தது.
கொலை குற்றவாளி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு எண். Crl.A.No. 1672/2019 விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 16.07.2025ல் கொலை குற்றவாளியின் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பாக திவாகரன் கொடுக்கப்பட்ட தண்டனைகளை தள்ளுபடி செய்து செய்தித்தாள்களில் வந்த செய்தியை அறிந்து பெற்றோர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே ஏழை பட்டியல் சாதியில் பிறந்து மிகவும் கொடூரமான முறையில் சாதீய படுகொலை செய்யப்பட்டு இரண்டு உயிர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டிருப்பது என்பது மிகவும் வேதனையாக உள்ளது.
எனவே தமிழக அளவில் இந்த வழக்கை சிறப்பாக நடத்தி தண்டனையை கிடைக்க வழிவகை செய்த மாண்புமிகு தமிழக அரசும், சிபிசிஐடி குற்றப்புலனாய்வுத் துறையினரும் உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் உடனுக்குடன் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றம் கொடுத்த தூக்குத் தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் உறுதி செய்து கொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருமாறு இறந்த எழில்முதல்வன், கஸ்தூரியின் பெற்றோர்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்தின் உள்ளிட்ட அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்