அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சவால்களை சாதனையாக்கும் திராவிட மாடல்

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு போக்குவரத்து வசதி ஆகியவை மேம்படுவது வழக்கம்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை முன்னெடுத்தவர் கலைஞர். மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது திராவிட மாடல் அரசு. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை (St.Thomas mount ) வரையிலான பறக்கும் ரயில் (MRTS) திட்டம் என்பது  சென்னை போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஒன்றிய அரசின் ரயில்வே துறையின் கீழ் வரும் திட்டம் என்றாலும், அதற்கான நிலம் எடுப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை திமுக ஆட்சி அமையும் போதும் இந்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை, சேப்பாக்கம் முதல் திருமயிலை வரை, திருமயிலை முதல் வேளச்சேரி வரை என திமுக ஆட்சி அமைந்த போதெல்லாம் இத்திட்டம் நீட்டிப்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது வேளச்சேரி முதல் பரங்கிமலை (St.Thomas mount ) வரையிலான பறக்கும் ரயில் திட்டம் நிறைவேறி இருக்கிறது.

முதல்வர் பிறந்தநாள்

தா.மோ. அன்பரசன்
தா.மோ. அன்பரசன்

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இருந்த மெத்தனப் போக்குக்கு மாறாக திமுக அரசு இந்தப் பணிகளை வேகப்படுத்தியது. தற்போது பறக்கும் ரயிலில் கடற்கரை முதல் பரங்கிமலை வரை பயணிக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதுடன்,  பரங்கிமலை (St Thomas Mount) நிலையத்தில் மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்,  suburban மின்சார ரயில் ஆகியவற்றுக்கான இணைப்பும் கிடைத்துள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இத்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை மாநில அரசு எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய முதல் நாள் பயணத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பயணித்து, இத்திட்டத்தின் சவால்களை திராவிட மாடல் அரசு எப்படி சாதனையாக்கியது என்பதை பெருமிதத்துடன் விளக்கினார்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

பரங்கிமலை முதல் வில்லிவாக்கம், அதன் பிறகு எண்ணூர், அங்கிருந்து கடற்கரை என இன்னும் இந்த திட்டம் பல கட்டங்களை தாண்ட வேண்டியுள்ளது.

சென்னையின் நெரிசலை குறைப்பதற்கான பொதுப் போக்குவரத்து திட்டத்தில் கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான இந்த பறக்கும் ரயில் திட்டம் மிக முக்கியமானதாகும். எளிய கட்டணத்தில் விரைவான பயணத்தை சென்னை மக்கள் மேற்கொள்வதற்கு இது வசதியாக இருக்கும்.

—   கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.