கட்சிக்கும், திராவிட கட்சி தலைவர்களுக்கும் ஒரு மனம் திறந்த மடல்……
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற தாரக மந்திரம் தமிழ்நாட்டிலே பல வருடங்களாக முழங்கி கொண்டிருக்கிற ஒன்று. அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் இந்த இரு திராவிட கட்சிகள் தமிழகத்திலே இந்த முழக்கத்தை முன் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் கூட்டாட்சி மத்தியில் சுயாட்சி என்கிற கோணத்தில் தமிழகததில் மாநிலக் கட்சிகளின் முதுகில் ஏறிக்கொண்டு சவாரி செய்கிறது. மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்யக்கூடிய பாரதிய ஜனதா கட்சி மாநில சுயாட்சி தத்துவத்தை முற்றிலகமாக சீர்குலைத்து எப்படியாவது வந்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளோடு இயங்கி வருகிறது.
ஒரு வேலையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதாவோடு இன்னும் பிற கட்சிகளோடு இணைந்து 2026 ஆம் ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தால் ஐயா எடப்பாடி மூன்று வருடம் முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் முதல்வராக இரண்டு வருடமும் பயணிக்கலாம்.
அப்படி பயணிக்கும் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அந்த நபர் முதல்வராக பதவியேற்கும் போது அந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய அத்தனை அரசு எந்திரங்களையும் தனது கைக்குள்ளே வைத்துக் கொண்டு மதச்சார்பின்மைக்கு எதிராகவும் அரசு ஆவணங்களை அழிக்கவும் புதிய ஆவணங்களை சேர்த்து வரலாற்று திரிபு வேலைகளை செய்யவும் தயங்காமல் செயல்படும் என்பது நிதர்சனமான உண்மை.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தாரக மந்திரத்தை அழித்து ஒழிக்க பாரதிய ஜனதா கட்சி முழுவதுமாக இறங்கி செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மாநிலத்தில் சுயாட்சி எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி முறையை திராவிட கட்சிகளோ மற்ற கட்சிகளோ ஏற்கவே கூடாது.
அப்படி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்குள் வந்துவிட்டால் எந்த திராவிட கட்சியோடு கூட்டணி ஆட்சி அமைக்கின்றதோ அந்த திராவிட கட்சிக்கு முற்றிலுமாக விழுங்கி ஏப்பம் விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதை தவிர்க்க அல்லது தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற திராவிட கட்சிகளின் தாக்குதல் நடந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தன்னுடைய கட்சியையும் தமிழகத்தையும் தமிழ் மண்ணையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய ஒரு மகத்தான பணியை திராவிட கட்சிகள் செய்தே ஆக வேண்டும்.
— தோழர். ஜெ. சந்திரன்