போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது.
இன்று 11.08.26 போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 660 அரசு அலுவலகங்கள், 842 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 201 கல்லூரிகள், 737 தொழிற்சாலைகள் & நிறுவனங்கள் 179 பொது மற்றும் பிற இடங்களில் என மொத்தம் 2,619 இடங்களில் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1,277.825 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள், 3117 போதை மாத்திரைகளில், நீதிமன்ற உத்தரவின்படி 817.672 கிலோ கஞ்சா போதைப்பொருளும், 889 போதை மாத்திரைகளும் அழிப்பதற்கு உத்தரவுகள் பெறப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி காவல் நிலையதிற்குட்பட்ட செங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள Medicare Enviro System என்ற தொழிற்சாலையில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப., தலைமையில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் முன்னிலையில், அனைத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்று மேற்கண்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.
மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களில் திருச்சி 6983, புதுக்கோட்டை-10007, கரூா் – 1706, பெரம்பலூர் 218, அரியலூர் 2313, தஞ்சாவூர் 5901, திருவாரூா-6542, நாகப்பட்டிணம் 288 மற்றும் மயிலாடுதுறை 802 கிலோ என மொத்தம் 34,760 கிலோ புகையிலை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் போதைபொருள் தடுப்புப்படை அமைக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட போதைபொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரும்பணியாற்றி வருகின்றனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.