அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் இயங்கி வந்த ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவர் கடந்த 2025-ம் ஆண்டு முதல் மேற்படி ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 10.012026-ம் தேதி ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தின் இயக்குனர் 1.மணிகண்டன் 50/26, த.பெ. தசரத்ராஜ், பாண்டமங்கலம், உறையூர், திருச்சி 2.மணிமாறன் 29/26, த.பெ. சீனிவாசன், மாருதி நகர் எண்.1 டோல்கேட், திருச்சி. 3.பெரியசாமி 34/26. த.பெ. முத்துச்செழியன். அதவத்தூர், ஸ்ரீரங்கம். 4.கிருஷ்ணமூர்த்தி 30/26, த.பெ. மருதை, கூகூர், லால்குடி 5. அறிவுமணி 45/26, த.பெ. செல்லக்கண்ணு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் 6. அபிஷேக் 27/26, த.பெ. மஸ்தான், வனப்பக்குடி, திருவையாறு. தஞ்சாவூர் 7. சூர்யபிரகாஷ் 28/26, த.பெ. பழனியப்பன். அப்பநல்லூர், தொட்டியம் மேற்படி விஜயகுமார் என்பவரை திட்டியும், மையத்தில் வைத்திருந்த தடி மற்றும் குழாய் போன்ற ஆயுதங்களால் விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 12.01.2026-ம் காலை 08.00 மணியளவில் இறந்துள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது தொடர்பாக, சோமரசம்பேட்டை கா.நி. குற்ற எண்.21/26, ச/பி. 191(2),191(3). 296(b), 115(2), 118(1), 105, 49 BNS @ 191(2), 191(3), 296(b), 103(1) BNS வழக்கின் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான மணிகண்டன் 50/26, த.பெ. தசரத்ராஜ், பாண்டமங்கலம், உறையூர். திருச்சி மாவட்டம் என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப.  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு  07.022026-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 10 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.