ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .சஸ்பெண்டு ! காரணம் என்ன ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டி.எஸ்.பி., ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 23 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விஜயக்குமார், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின் படிப்படியாக ஆய்வாளர், காவல் துணை கண்காணிப்பாளர் என பதவி உயர்வு பெற்று தென்காசி மாவட்டத்திலேயே அதுவும் ஒரே தாலுகாவிலேயே பணியாற்றி வந்துள்ளார்.

வாணியம்பாடி டிஎஸ்பியாக புரமோஷனில் வருவதற்கு முன்னர் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த போது தவறுதலாக துப்பாக்கியை பயன்படுத்தியதிய விவகாரத்தின் காரணமாகவும் , அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சஸ்பெண்ட் எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது..
— மணிகண்டன்