அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பகல்ஹாம் தாக்குதல் – துணைவேந்தர்கள் மாநாடு – துரை வைகோ கருத்து !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை கொடுத்திருந்தனர்.

இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஒரு ஆளுநராக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக அவரது தலையீடுகள் இருந்தது இது போன்ற விஷயங்களை தமிழக ஆளுநர் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார். இதற்கு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

எப்போதும் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை கூட்டுகிறார். அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி துணைவேந்தர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனை சரியான முடிவாகத்தான் பார்க்கிறேன்.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தான் வைத்த தான் எல்லாமே என்று சொல்கிறபடி தமிழக அரசு தமிழக முதல்வர் எடுக்கக்கூடிய எல்லா முடிவுகளையும் குறிப்பாக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக எல்லா விஷயங்களிலும் தலையீடுவது, பல்கலைகழகங்களில் தவறு செய்பவர்களுக்கு உடன்பட்டு இருப்பது கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது. காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் கொடுமையானது. ஒரு குறிப்பட்ட மதத்தினை சார்ந்தவர்களை அடையாளப்படுத்தி கொலை செய்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வலதுசாரி அரசியல் சிந்தனை , சாதி, மத அடிப்படையில் செயல்படுகின்ற இயக்கங்கள், இளைஞர்களிடம் வன்முறைகளை விதைக்கின்றனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காஷ்மீர் பஹல்காம் பகுதி

காஷ்மீர் பஹல்காம் பகுதி

ஜாதி, மதங்களை கடந்து மக்கள் சிந்திக்க வேண்டும், இது போன்ற சம்பவங்களை ஈடுபடுவர்களை அந்த சமூகமே புறக்கணிக்கும், காஷ்மீர் பஹல்காமில் நடந்த சம்பவத்திற்கு அனைத்து பொது மக்களும் கண்டித்தது மட்டுமின்றி, வேதனைப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு இச்சம்பவம் ஒரு அவமானம் என்று கூறியுள்ளனர். பொதுவாக அரசினை எதிர்த்து தான் காஷ்மீரில் கடையடைப்பு நடைபெறும், ஆனால் இன்றைக்கு இச்சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவிரவாதிகளை கண்டித்து காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் கடையடைப்பு நடத்தியுள்ளனர்.

காஷ்மீரில் இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பஹல்காமில் 2002ல் சம்பவம் நடைபெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடம் என்பதால் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டும், பாதுகாப்பு குறைபாடு இருந்தாக முன்னாள் இராணுவீரர்கள் உள்பட பல தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க கூடாது, தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் இதை  அரசியலாக்க விரும்பவில்லை, அரசு எடுக்கும் நடவடிக்கைகளினால் தீவிரவாதத்திற்கும், அவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,

தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள் மனித நேயத்திற்கு எதிரானவர்கள். மனித மிருகங்கள், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

வைகோ
வைகோ

மதிமுகவை கடந்து வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார். வைகோவிற்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதனை தமிழகத்தின் குரலாக தான் பார்க்க வேண்டும் தவிர மதிமுகவின் குரலாக பார்க்க கூடாது. அரசியலை கடந்து வைகோ ராஜ்ய சபா உறுப்பினராக போவது மதிமுகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள், திமுக தலைமை கண்டிப்பாக பரீசிலிக்கும் என்று நினைக்கிறேன்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வருகிறது. கூட்டணி நன்றாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் நினைக்கிறார். கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது, அதற்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கடந்த கால பல்வேறு கசப்புகளால் சில நிகழ்வுகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக 8 ஆண்டுகளாகிவிட்டது. இதே நிலைப்பாட்டில் தான் திருமாவளவனும் இருக்கிறார்.  கூடடணிக்குள் குழப்பம், பிரச்சினை வரும் மாதிரி எந்தவொரு கருத்துகளையும்  திருமாவளவன் சொன்னது கிடையாது என்றார்.

 

—   மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.