சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி ! – சமையல் குறிப்பு – 47

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இந்த சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை வித்யாசமானதாகவும் நல்லாவும் இருக்கும். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார அங்குசம் வார இதழில்…

(ஊறவைப்பதற்கு) எலும்பு இல்லாத மட்டன் அரை கிலோ, உப்பு கால் டீஸ்பூன், மஞ்சத்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஆஃப் டீஸ்பூன், கெட்டி தயிர் 50 மில்லி கிராம்.

(வதக்கி அரைப்பதற்கு) எண்ணெய் 50 மிலி, மிளகு 15, சீரகம் 1/4 ஸ்பூன், கிராம்பு 7 ஏலக்காய் 5, பட்டை 2 துண்டு, பெருங்காயம் சிறிதளவு, தக்காளி 150 கிராம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

(தாளிப்பதற்கு) எண்ணெய் தேவையான அளவு, வர மிளகாய் 5,பிரியாணி இலை, 2 , கருவேப்பிலை ஒரு கொத்து சீரகத்தூள் அரை ஸ்பூன், கரம் மசாலா கால் ஸ்பூன், மல்லித்தூள் அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:-

கழுவிய மட்டனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கெட்டி தயிர் சேர்த்து கைகளால் நன்கு இரண்டு நிமிடம் பிரட்டி 10 நிமிடம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு சீரகம், கிராம்பு, ஏலக்காய் பட்டை சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய், பிரியாணி இலை, கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த மசாலாவை பச்சை வாசனை போக வதக்கி பின் மட்டன் சேர்த்து கிளறி அத்துடன் சீரகத்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி, பிரட்டி மூடி வைத்து குறைவான தீயில் 15 முதல் 20 நிமிடம் வேகவைத்து இறக்கினால்

 லபோரி மட்டன் கிரேவி
லபோரி மட்டன் கிரேவி

சுவையான லபோரி மட்டன் கிரேவி தயார்.

 

— பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.